உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

கிளிநொச்சி கோணாவில் வட்டாரத்திற்கான மக்கள் சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 46 நிமிடங்கள் முன்
41 பார்வைகள்

கிளிநொச்சி கோணாவில் வட்டாரத்திற்கான மக்கள் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் கோணாவில் கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வட்டார பிரதேச சபை உறுப்பினர் ச.சிவயோகலக்சுமி உள்ளிட்ட பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,
இலங்கையில இருக்கிற நீதிபதிகளுடைய வயதை கூட்டுகிறார்கள். 62 வயதோடு இருக்கிற நீதிபதியை 67 வயது வரைக்கும் கொண்டு வருகிறார்கள்.

மேல்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இரண்டு நீதிமன்றங்களுக்கும் வருகின்ற நீதிபதிகளின் வயதை 62 வயதிலிருந்து 67 வயது வரைக்கும் கொண்டு வர தீர்மானித்திருக்கிறார்கள்.

இதற்கு பல எதிர்ப்புகள், பல இராஜதந்திரிகள் மத்தியிலும் இருக்கிறது. அதைவிட வழக்கறிஞர்கள் சங்கம் (Bar Association) என்று சொல்வது, வழக்கறிஞர்கள் சங்கமும் அதை கடுமையாக எதிர்க்கிறது.

எதிர்க்க எதிர்க்க நாடாளுமன்றத்திலே அது விவாதத்திற்கு வருகிறது. வருகின்ற 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் அது விவாதத்திற்காக வருகிறது.

விவாதத்திற்கு வருகின்ற பொழுது, நாங்கள் அதனை எதிர்த்து வாக்களிப்பதாக தீர்மானித்திருக்கிறோம். அந்த திருத்தத்திற்கு ஆதரவு இல்லை.

அப்படி என்றால், இலங்கையில் இருக்கிற அனைத்து ஊழியர்களுக்கும் 65 வயதாக ஆக்குங்கள், பிரச்சினையில்லை. ஆனால் அரசாங்கம் யாரை மட்டும் கொண்டு வர முயற்சிக்கிறது என்றால் நீதிபதிகளை. தங்களுக்கு ஏற்ற நீதிபதிகளை நியமித்து, தங்களுக்கு ஏற்ற தீர்ப்புகளை வழங்க முயற்சிக்கிறார்கள்.

இதனால் பாதிக்கப்படப் போவது நாங்கள்தான். உங்களுக்குத் தெரியும், நாங்கள் எதிர்க்கட்சிதான். நாங்கள் இந்த நாட்டில் ஆளுங்கட்சி இல்லை. ஆனால், பிரதேச சபையில் ஆளுங்கட்சி யார்? நீங்கள்தான், நாங்கள்தான்.

அப்ப நாங்கள் பிரதேச சபையில் வருமானத்தை வைத்துக்கொண்டு, ஆளுங்கட்சியாக இதனை நாங்கள் செய்துதான் ஆக வேண்டும். இதிலிருந்து நாங்கள் விலகிப் போக முடியாது. இதனை நாங்கள் செய்கிறோம்.

ஆனால் மக்கள் சில நேரங்களில் தேர்தல் வரைக்கும் என்ன செய்கிறார்கள்? சில பேரை மாற்றித் தேர்வு செய்கிறார்கள். அல்லது மக்கள் ஏதோ ஒரு கோபத்தில் ஆராயாமல் பார்த்த உடனே தேர்வு செய்து விடுகிறார்கள்.

இன்றைக்கு அப்படி தேர்வு செய்யப்பட்டவரின் நிலைமை? போய் எங்களை யார் அழித்தானோ, எங்களை யார் இன அழிப்பு செய்தானோ, எங்கள் வீடுகளிலெல்லாம் இன்றைக்கும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது என்றால், எங்கள் பிள்ளைகளைக் காணவில்லை என்று யார் காணாமல் ஆக்கினானோ, அவனோடு மேடையில் ஏறி நின்று ஒருத்தன் பேசுகிறான் நேற்று! நீங்கள் வாக்கு போட்ட ஒருத்தன்தான்!

அவனை ‘தந்தை’ என்றான், அவன்தான் ‘நாட்டின் ஜனாதிபதி’ என்றான். அவன் என்ன சொல்கிறான் என்று அவனுக்கே தெரியாது! அவனுடைய சொல்லுக்கும் செயலுக்கும் இடையே அவனுக்கே ஒன்றும் தெரியவில்லை.

இப்படிப்பட்ட ஒரு நிலைமையில்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மீனவர்களின் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய “கொப்பரா” மீன்.!

மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மன்னார் மீனவர்களின் வலையில் இன்று (14) அதிகாலை ஆழ்கடல் மீனான “கொப்பரா” என அழைக்கப்படும் ஆழ் கடல் மீன் சிக்கியுள்ளது. சுமார்…

48 0 0
இலங்கை செய்திகள்

விபத்துக்குள்ளான P 4447 வேகத் தாக்குதல் படகு மீட்பு.!

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 2026 ஆகஸ்ட் 15 ஆம் திகதி எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய இலங்கை கடற்படையின் P 4447 வேகத் தாக்குதல் ரோந்துப் படகு,…

34 0 0
இலங்கை செய்திகள்

பணியாற்ற அதிகாரம் அவசியம்; மாகாண சபை தேர்தலில் களமிறங்க நளின் பண்டார விருப்பம்.!

நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து 13 முதல் 14 ஆண்டுகள் மக்கள் பணியாற்றிய அனுபவம் உள்ளபோதிலும், எதிரணியில் இருந்து கொண்டு மக்களுக்குத் தேவையான பணிகளை திறம்பட செய்ய முடியாது…

56 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி பிக்கு உ*யிரிழப்பு.!

கண்டி – உடுதும்பர, கைகாவல பகுதியில் உள்ள ஹீன் கங்கையில் நீராடச் சென்ற 11 வயதான பௌத்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

54 0 0