உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

அகில இலங்கை தமிழ்மொழித் தினப் போட்டியில் சென்கிளையார் தமிழ் வித்தியாலய மாணவி சாதனை.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
43 பார்வைகள்

அகில இலங்கை தமிழ்மொழித் தினப் போட்டியில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட சென்கிளையார் தமிழ் வித்தியாலய மாணவி ப.ஹன்சிகா தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற தமிழ்மொழித் தினப் போட்டிகள் நேற்று பத்தரமுல்லை இசுறுபாயவில் இடம்பெற்றன.

இதன்போது, நுவரெலியா கல்வி வலயத்தைச் சேர்ந்த சென்கிளையார் தமிழ் வித்தியாலயத்தில் இருந்து பாவோதல் பிரிவு இரண்டில் போட்டியிட்ட மாணவி ப.ஹன்சிகா, தனது திறமையை வெளிப்படுத்தி தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

மாகாண மட்டப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்த மாணவி ஹன்சிகா, தேசிய மட்டத்திலும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் சென்கிளையார் தமிழ் வித்தியாலயத்திற்கும், நுவரெலியா கல்வி வலயத்திற்கும், பாடசாலை சமூகத்திற்கும் அவர் பெருமை சேர்த்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிளிநொச்சி கோணாவில் வட்டாரத்திற்கான மக்கள் சந்திப்பு.!

கிளிநொச்சி கோணாவில் வட்டாரத்திற்கான மக்கள் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் கோணாவில் கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் வட்டார…

37 0 0
இலங்கை செய்திகள்

விபத்துக்குள்ளான P 4447 வேகத் தாக்குதல் படகு மீட்பு.!

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 2026 ஆகஸ்ட் 15 ஆம் திகதி எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய இலங்கை கடற்படையின் P 4447 வேகத் தாக்குதல் ரோந்துப் படகு,…

31 0 0
இலங்கை செய்திகள்

பணியாற்ற அதிகாரம் அவசியம்; மாகாண சபை தேர்தலில் களமிறங்க நளின் பண்டார விருப்பம்.!

நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து 13 முதல் 14 ஆண்டுகள் மக்கள் பணியாற்றிய அனுபவம் உள்ளபோதிலும், எதிரணியில் இருந்து கொண்டு மக்களுக்குத் தேவையான பணிகளை திறம்பட செய்ய முடியாது…

53 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி பிக்கு உ*யிரிழப்பு.!

கண்டி – உடுதும்பர, கைகாவல பகுதியில் உள்ள ஹீன் கங்கையில் நீராடச் சென்ற 11 வயதான பௌத்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

51 0 0