உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொ*லை.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
49 பார்வைகள்

அனுராதபுரம், பரசன்கஸ்வெவ – வன்னி பளுகொல்லேவ பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பின்போது, 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என்று பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பிரிகஸ்வெவ, வன்னி பளுகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞருக்கும் மற்றுமொரு இளைஞருக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த தனிப்பட்ட பகைமை காரணமாகவே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்ற அனுராதபுரம் இலக்கம் 02 நீதிமன்ற நீதிவான் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.

அத்துடன் உயிரிழந்த இளைஞரின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிளிநொச்சி கோணாவில் வட்டாரத்திற்கான மக்கள் சந்திப்பு.!

கிளிநொச்சி கோணாவில் வட்டாரத்திற்கான மக்கள் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் கோணாவில் கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் வட்டார…

36 0 0
இலங்கை செய்திகள்

விபத்துக்குள்ளான P 4447 வேகத் தாக்குதல் படகு மீட்பு.!

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 2026 ஆகஸ்ட் 15 ஆம் திகதி எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய இலங்கை கடற்படையின் P 4447 வேகத் தாக்குதல் ரோந்துப் படகு,…

31 0 0
இலங்கை செய்திகள்

பணியாற்ற அதிகாரம் அவசியம்; மாகாண சபை தேர்தலில் களமிறங்க நளின் பண்டார விருப்பம்.!

நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து 13 முதல் 14 ஆண்டுகள் மக்கள் பணியாற்றிய அனுபவம் உள்ளபோதிலும், எதிரணியில் இருந்து கொண்டு மக்களுக்குத் தேவையான பணிகளை திறம்பட செய்ய முடியாது…

53 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி பிக்கு உ*யிரிழப்பு.!

கண்டி – உடுதும்பர, கைகாவல பகுதியில் உள்ள ஹீன் கங்கையில் நீராடச் சென்ற 11 வயதான பௌத்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

51 0 0