உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
13 ஞாயிறு

ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கை செய்திகள் 17 மணி நேரம் முன்
49 பார்வைகள்

டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாஸிக் என்பவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று கொழும்பு புதுக்கடை இலக்கம் 3 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் நேற்று (11) மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஷிரான் பாசிக் என்பவரினால் போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைக்கப்பட்டதாகக் கூறப்படும் 3 கோடி ரூபா பணத்தைச் செலவிட்டு கம்பஹா பிரதேசத்தில் சொகுசு வீடு ஒன்றை தனது பெயரில் கொள்வனவு செய்தது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைவாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மணி மனிதப் படுகொலைக்கு விசாரணை கோரி யாழ். நகரில் இன்று பேரணி

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளைச் சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பேரணி…

2 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது.!

சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நால்வரை மூன்று டிங்கி படகுகளுடன் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடல் மற்றும்…

61 0 0
இலங்கை செய்திகள்

ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியில் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு விழா.!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 3 ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியில், 2025ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் ஏற்பாட்டில், தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும்…

47 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.!

கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேசத்தில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு ஒவ்வொரு குழந்தைகளுக்கும் எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு பேரணியும் சிறுவர் பாதுகாப்பு நிகழ்வும்…

46 0 0