கிளிநொச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.!
கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேசத்தில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு ஒவ்வொரு குழந்தைகளுக்கும் எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு பேரணியும் சிறுவர் பாதுகாப்பு நிகழ்வும் இன்று (12) நடைபெற்றது.
கிளிநொச்சி அக்கராயன் குளம் பகுதியில் அமைந்துள்ள மெதடிஸ்த திருச்சபையின் ஏற்பாட்டில் தோமாஸ்கோ சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் 247 சிறுவர்களை உள்ளடக்கிய வகையில் இன்று மாலை குறித்த நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வின் முன்னதாக சிறுவர்கள், பெற்றோர்கள் இணைந்து அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அவசியம் எனும் தொனிப்பொருளை வலியுறுத்தி அக்கராயன் சந்தியில் இருந்து விழிப்புணர்வு பேரணியை முன்னெடுத்தனர்.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் நடைபெற்ற அரங்கில் போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் சிறுவர்களின் எதிர்காலம் குறித்து பல்வேறு கருத்துரைகளும் விழிப்புணர்வு நாடகங்களும் நடைபெற்றன.
இதில் மதத்தலைவர்கள், சிறுவர், பாதுகாப்பு உத்தியோகத்தர், பெற்றோர்கள், ஆசிரியர்கள், துறை சார்ந்த திணைக்களத் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.



