உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
13 ஞாயிறு

செங்கடல் நுழைவாயிலைக் கைப்பற்றிய ஹவுதிகள்!

உலக செய்திகள் 23 மணி நேரம் முன்
16 பார்வைகள்

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் யேமனின் ஹவுதி அமைப்பினர் பொப் அல்-மந்தேப் (Bab el-Mandeb) நீரிணையில் அமைந்துள்ள மிக முக்கிய மூலோபாய தீவான ‘பெரிம்’ (Perim Island) பகுதியைக் கைப்பற்றியுள்ளனர்.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசுப் படைகள் பெரிம் தீவிலிருந்து பின்வாங்கியுள்ளன.

அத்துடன் இந்தத் தீவுக்கு எதிரே உள்ள செங்கடல் கடற்கரை நகரான துபாப் (Dubab) பகுதியையும் ஹவுதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்ட சூழலில் செங்கடலின் நுழைவாயிலான பொப் அல்-மந்தேப் நீரிணையையும் ஹவுதிகள் கைப்பற்றுவது ஈரானுக்குப் பெரும் பலமாக அமையும் என அஞ்சப்படுகிறது.

இது உலகளவில் எண்ணெய் விலையை மேலும் உயர்த்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், சவூதி அரேபியாவின் ‘கிழக்கு-மேற்கு’ (East-West) எண்ணெய் குழாய்ப் பாதை மீது ஈராக்கிலிருந்து நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலால் அது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணைக்கு மாற்றாகச் சவூதி அரேபியா பயன்படுத்தி வந்த ‘கிழக்கு-மேற்கு மசகு எண்ணெய் குழாய்ப் பாதையின் ரியாத் மற்றும் மதினா பகுதியிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்;டுள்ளது.

எனினும் ஈராக் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தற்போது பதில் தாக்குதல் நடத்துவதைத் தவா்த்துள்ளதாக சவூதி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருந்தபோதும். தனது பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் உரிமை தனக்கு உள்ளதாகவும் சவூதி எச்சரித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

இந்தியாவில் மீட்கப்பட்ட ஒராங்குட்டான்கள் : இந்தோனேசியாவுடன் கூட்டு விசாரணை

இந்தியாவில் மீட்கப்பட்ட ஐந்து ஒராங்குட்டான் குட்டிகளை அவற்றின் சொந்த நாடான இந்தோனேசியாவுக்கு மீள அனுப்புவது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்தோனேசிய அரசு முதன்முறையாக…

16 0 0
உலக செய்திகள்

நயகரா ஆற்றில் உருவாக்கப்பட்ட இயற்கை வாழ்விடங்கள்!

கனடாவில் நயகரா ஆற்றின் கரையோர ஈரநிலங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிவடைந்ததைத் தொடர்ந்து, மீள்சுழற்சி செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் மரக் கழிவுகளை ஆற்றுப் படுகையில் நிலைநிறுத்தி…

12 0 0
உலக செய்திகள்

ரொபோக்களின் விநோத போராட்டம்!

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோ தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், வேலை வாய்ப்புப் பாதுகாப்புக்காக கடுமையான சட்டங்களை இயற்றுமாறு கோரி போலந்தின் வார்சோ நகரில்…

16 0 0
உலக செய்திகள்

ட்ரம்பின் வருகையை முன்னிட்டு அயர்லாந்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அயர்லாந்து வருகையையொட்டி, அந்த நாட்டு வரலாற்றிலேயே மிகப்பாரிய பாதுகாப்பு மற்றும் காவல்துறை கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, செப்டம்பர் 12…

11 0 0