உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
13 ஞாயிறு

2030 உலகக் கிண்ண இறுதிப்போட்டி: மொரோக்கோவின் உரிமைக்கோரலுக்கு ஃபீஃபா மறுப்பு

13 பார்வைகள்

2030 ஆம் ஆண்டு ஃபீஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி மொரோக்கோவில் நடைபெறும் என அந்தநாட்டு கால்பந்து சம்மேளனத் தலைவர் கூறிய கருத்தை உலகக் கால்பந்து நிர்வாக அமைப்பான ஃபீஃபா மறுத்துள்ளது

அத்துடன் இறுதிப்போட்டி நடக்கும் மைதானம் குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

முன்னதாக, மொரோக்கோவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 1,15,000 இருக்கை வசதி கொண்ட ‘இரண்டாம் ஹசன் அரசர் மைதானத்திலேயே, 2030 உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெறும் என மொமொக்கோ கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பௌசி லெக்ஜா (Fouzi Lekjaa) தெரிவித்திருந்தார்.

எனினும் இறுதிப்போட்டி நடைபெறும் இடம் மற்றும் மைதானம் குறித்த அதிகாரப்பூர்வ முடிவு “சரியான நேரத்தில்” முறைப்படி அறிவிக்கப்படும் என ஃபீஃபா தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஃபீஃபா தலைவர் தேர்தலில் மொரோக்கோவின் அரசியல் ஆதரவைப் பெறுவதற்காகஇ தற்போதைய தலைவர் ஜியானி இன்ஃபாண்டினோ (Gianni Infantino) இறுதிப்போட்டியை மொரோக்கோவிற்கு வழங்குவதாக உறுதியளித்தார் என்ற செய்திகளையும் ஃபீஃபா ஏற்கனவே மறுத்திருந்தது.

2030 உலகக் கோப்பைத் தொடரை மொரோக்கோ, ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

2010 இல் தென்னாப்பிரிக்காவிற்குப் பிறகு ஆப்பிரிக்கக் கண்டத்தில் உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுப்பது இது இரண்டாவது முறையாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

பாகிஸ்தானிய கிரிக்கெட் வீராங்கனைக்கு அபராதம்!

ஆசியக் கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியின் போது மைதானத்தில் முறையற்ற செய்கை (gesturing) செய்ததற்காக பாகிஸ்தான் மகளிர் அணித் தலைவர் பாத்திமா சனா மீது…

152 0 0
விளையாட்டுச் செய்திகள்

CPL வரலாற்றில் தசுன் ஷானக்க புதிய சாதனை

CPL வரலாற்றிலேயே அதிவேக சதமடித்து புதிய சாதனை படைத்துள்ளார் இலங்கை அணி வீரர் தசுன் ஷானக்க. செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக களமிறங்கிய ஷானகா,…

78 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கைக்கு அதிர்ச்சி – இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய முக்கிய 2 வீரர்கள்!

இங்கிலாந்திற்கு எதிரான டி20 தொடருக்கு முன்பாக இலங்கை அணிக்கு மிகப்பெரிய இரட்டைப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நட்சத்திர வீரர் குசல் மெண்டிஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ…

105 0 0
விளையாட்டுச் செய்திகள்

இந்தியாவில் நடக்கிறது மகளிர் சாம்பியன்ஸ் கிண்ணம்!

இலங்கையில் நடைபெறவிருந்த முதலாவது மகளிர் செம்பியன்ஸ் கிண்ண தொடர், தற்போது இந்தியாவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் அரசாங்கத்தின் தலையீடு மற்றும் இடைக்காலக் குழு…

84 0 0