உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
13 ஞாயிறு

வீடொன்றின் மீது கவிழ்ந்த பாரவூர்தி.!

இலங்கை செய்திகள் 14 மணி நேரம் முன்
38 பார்வைகள்

பதுளை – மஹியங்கனை வீதியில், மடித்தலை பகுதியில் வீடு ஒன்றின் மீது பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் வீட்டில் இருந்த தந்தை அவரது மகன் மற்றும் பாரவூர்தியின் சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளையிலிருந்து மஹியங்கனை நோக்கிச் சென்ற குறித்த பாரவூர்தியின் பிரேக் தொழிற்படாமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாரவூர்தி விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீதும் மோதியதுடன், பின்னர் சுமார் 75 அடி பள்ளத்தில் இருந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வீடு ஒன்றின் மீது கவிழ்ந்துள்ளது.

இவ்விபத்து குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது.!

சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நால்வரை மூன்று டிங்கி படகுகளுடன் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடல் மற்றும்…

59 0 0
இலங்கை செய்திகள்

ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியில் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு விழா.!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 3 ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியில், 2025ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் ஏற்பாட்டில், தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும்…

45 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.!

கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேசத்தில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு ஒவ்வொரு குழந்தைகளுக்கும் எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு பேரணியும் சிறுவர் பாதுகாப்பு நிகழ்வும்…

44 0 0
இலங்கை செய்திகள்

மணல் விநியோக நடவடிக்கைகள் தொடர்பாக மக்களை தெளிவூட்டும் ஊடக சந்திப்பு.!

கரைச்சி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் விநியோக நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களை தெளிவூட்டும் ஊடக சந்திப்பை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் ஏற்பாடு…

41 0 0