உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

அரசுக்கு எதிராக நாளை மாபெரும் உணவு தவிர்ப்பு போராட்டம்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
92 பார்வைகள்

தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழ் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் கூட இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள சாவகச்சேரி நகர சபை முன்னாள் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர், சாவகச்சேரி பிரதேச சபையின் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உறுப்பினர் மயூரன் ஆகியோர், நாளை சனிக்கிழமை சாவகச்சேரியில் மாபெரும் உணவு தவிர்ப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

சமகால விவகாரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

நாளை சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சாவகச்சேரி பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டம் குறித்து அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,

“செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 500 இற்கும் அதிகமான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்குச் சர்வதேச விசாரணை கோருதல், காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்துதல் மற்றும் நீண்டகாலமாக சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் ஆகிய முக்கிய கோரிக்கைகள் இந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளன.

உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்துக்குள் ‘பிரஜா சக்தி’ அமைப்பை உருவாக்கித் தலையீடு செய்வதற்கு எதிராகவும், ஆளுநரால் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மற்றும் எதேச்சதிகார அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல் மற்றும் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவித்தல் போன்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்படவுள்ளன.

இந்தப் போராட்டத்துக்கு அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ்த் தேசியம் சார்ந்து இயங்கும் பொதுமக்கள், பொது அமைப்புகள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சாவகச்சேரி, கொடிகாமம் மற்றும் கைதடி வணிகர் கழகங்கள், சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் முச்சக்கரவண்டி சங்கங்கள் மற்றும் தென்மராட்சி சிற்றூர்திச் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரும் தங்களது பாரிய ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கியுள்ளனர்.

எனவே, அரசின் தற்போதைய செயற்பாடுகளுக்கு எதிராகத் தமது உணர்வுபூர்வமான எதிர்ப்பை வெளிப்படுத்தவும், உரிமைகளை வென்றெடுக்கவும் நாளை நடைபெறவுள்ள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் அனைத்து மக்களையும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை அணிதிரளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி 21 ஆவது வாரமாகத் தொடரும் மயிலிட்டி மக்களின் போராட்டம்!

தமது பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மக்கள் இன்று வெள்ளிக்கிழமை 21 ஆவது வாரமாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவின்…

102 0 0
இலங்கை செய்திகள்

இந்திய முகாமில் இருந்து தனித்து இலங்கை திரும்பிய 17 வயதுச் சிறுவன் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு!

தமிழகம், அரியலூர் முகாமில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஒருவன், தனித்து இலங்கை திரும்பியபோது இலங்கை எல்லையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுத் தலைமன்னார் பொலிஸாரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளார்.…

124 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரின் கனிமம் மற்றும் காணி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விசேட கலந்துரையாடல்!

மன்னாரின் கனிமம் மற்றும் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல்! மணல் அகழ்வு அனுமதிகள், வனப்பகுதிகள் மற்றும் வீதி அபிவிருத்தி தொடர்பில் முக்கிய முடிவுகள் மன்னார்…

113 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளராக க.ஏகாந்தன் அவர்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை ஆளுநர்…

75 0 0