உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

யானை தாக்கி ஒருவர் உ*யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
105 பார்வைகள்

கொடவெஹெர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுதலியாவ குளத்திற்கு அருகில் காட்டுயானை தாக்கியதில் பலத்த காயமடைந்த வயோதிபர் ஒருவர் நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (10) இடம்பெற்றுள்ளதாகக் கொடவெஹெர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெல்லகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய வயோதிபர் ஒருவரே இத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

குறித்த வயோதிபர் இரவு நேரத்தில் குள பகுதிக்குச் சென்ற போது வீதியில் நின்ற காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

அதன் பின்னர் தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் கோட்டவெஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்திய முகாமில் இருந்து தனித்து இலங்கை திரும்பிய 17 வயதுச் சிறுவன் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு!

தமிழகம், அரியலூர் முகாமில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஒருவன், தனித்து இலங்கை திரும்பியபோது இலங்கை எல்லையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுத் தலைமன்னார் பொலிஸாரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளார்.…

2 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரின் கனிமம் மற்றும் காணி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விசேட கலந்துரையாடல்!

மன்னாரின் கனிமம் மற்றும் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல்! மணல் அகழ்வு அனுமதிகள், வனப்பகுதிகள் மற்றும் வீதி அபிவிருத்தி தொடர்பில் முக்கிய முடிவுகள் மன்னார்…

110 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளராக க.ஏகாந்தன் அவர்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை ஆளுநர்…

69 0 0
இலங்கை செய்திகள்

அரசுக்கு எதிராக நாளை மாபெரும் உணவு தவிர்ப்பு போராட்டம்.!

தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழ் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் கூட இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என்று குற்றம்…

89 0 0