உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு; பயணிகள் விசனம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
117 பார்வைகள்

அக்கரைப்பற்று மாநகர சபைக்குச் சொந்தமான அக்கரைப்பற்று மத்திய பேருந்து நிலையம் உரிய முறையில் துப்புரவு செய்யப்படாமல் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவதாக பயணிகளும் பொதுமக்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.

பேருந்து நிலையப் பகுதியில் மாட்டு எரு உள்ளிட்ட கழிவுகள் மற்றும் குப்பைக் கூளங்கள் குவிந்து காணப்படுவதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், பிளாஸ்டிக் போத்தல்களை சேகரிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள கூடையும் நிரம்பிய நிலையில் காணப்படுவதாகவும், அதிலுள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்கள் பலத்த காற்று வீசும் நேரங்களில் காற்றில் பறந்து பொதுமக்கள் மீது விழும் நிலை காணப்படுவதாகவும் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பொதுமக்கள் தினமும் அதிகளவில் பயன்படுத்தும் முக்கியமான பேருந்து நிலையம் இவ்வாறு சுகாதாரமற்ற நிலையில் காணப்படுவது கவலைக்குரிய விடயம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, அக்கரைப்பற்று மத்திய பேருந்து நிலையப் பகுதியில் காணப்படும் மாட்டு எரு, குப்பை கூளங்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அகற்றி, பேருந்து நிலையத்தை முறையாக துப்புரவு செய்து சுகாதாரமான சூழலை ஏற்படுத்தித் தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்திய முகாமில் இருந்து தனித்து இலங்கை திரும்பிய 17 வயதுச் சிறுவன் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு!

தமிழகம், அரியலூர் முகாமில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஒருவன், தனித்து இலங்கை திரும்பியபோது இலங்கை எல்லையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுத் தலைமன்னார் பொலிஸாரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளார்.…

2 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரின் கனிமம் மற்றும் காணி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விசேட கலந்துரையாடல்!

மன்னாரின் கனிமம் மற்றும் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல்! மணல் அகழ்வு அனுமதிகள், வனப்பகுதிகள் மற்றும் வீதி அபிவிருத்தி தொடர்பில் முக்கிய முடிவுகள் மன்னார்…

110 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளராக க.ஏகாந்தன் அவர்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை ஆளுநர்…

69 0 0
இலங்கை செய்திகள்

அரசுக்கு எதிராக நாளை மாபெரும் உணவு தவிர்ப்பு போராட்டம்.!

தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழ் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் கூட இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என்று குற்றம்…

89 0 0