உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சபாநாயகர் மீது இலஞ்ச, ஊழல் விசாரணை; அவர் எதற்கும் தலைமை வகிக்கவே முடியாது.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
150 பார்வைகள்

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணையொன்றை முன்னெடுத்துள்ள நிலையில், அவர் சட்டமன்றத்துக்குத் தலைமை தாங்கவோ அல்லது அரசமைப்புச் சபையின் தலைவர் பதவியை வகிக்கவோ சட்டப்படியோ ஒழுக்கவியல் பிரகாரமோ உரிமையில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சபாநாயகருக்கு எதிரான இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகளைச் சுட்டிக்காட்டி, நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை சிறப்புரிமை மீறல் பிரச்சினை ஒன்றை அவர் முன்வைத்தார்.

அவர் முன்வைத்த சிறப்புரிமைப் பிரச்சினையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
“சபாநாயகர் பதவியை வகித்தல், நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்குதல் மற்றும் அரசமைப்புச் சபையின் தலைவராகச் செயற்படுதல் தொடர்பில் எழுந்துள்ள சட்ட, ஒழுக்கவியல் மற்றும் நிறுவன நம்பகத்தன்மை சார்ந்த சிறப்புரிமைப் பிரச்சினையாக இது அமைகின்றது. 1953 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க நாடாளுமன்ற (அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்) சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் நிலையியல் கட்டளை 29 இன் பிரகாரம் இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் பதவிக் காலத்தில் அரச வளங்கள் மற்றும் வசதிகளைப் பயன்படுத்தியதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பிலேயே ஆணைக்குழு விசாரித்து வருகின்றது. ஆணைக்குழு விசாரணை நடத்துவதனால் மாத்திரம் ஒருவர் குற்றவாளியாக மாட்டார் என்பதையும், சட்டபூர்வ நடைமுறைகள் முடியும் வரை அவருக்குக் குற்றமற்றவர் என்ற அனுமானம் உண்டு என்பதையும் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

சுதந்திரமான ஆணைக்குழுக்களுக்கு உயர் அதிகாரிகளை நியமிக்கும் அரசமைப்புச் சபையின் தலைவராகவும், விசாரணைக்குத் தேவையான சாட்சியங்களை வழங்கும் நாடாளுமன்றத்தின் தலைவராகவும் அவர் தொடர்வது நம்பகத்தன்மை தொடர்பில் பல கேள்விகளை எழுப்புகின்றது. 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 162 ஆம் பிரிவின் கீழ் சபாநாயகரும் ‘அரச ஊழியர்’ என்ற வரையறைக்குள் அடங்குவதால், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 107 ஆம் பிரிவின்படி விசாரணைக்கு உட்படுத்தப்படும் நபர் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் தலையிட முடியாது.

எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள ஊழல் எதிர்ப்புச் சட்டத் திருத்தத்துக்கு அரசமைப்பின் 79 ஆம் உறுப்புரையின்படி சபாநாயகர் தனது கையொப்பத்துடன் சான்றளிக்க வேண்டும். எனினும், தற்போதைய சட்ட ஏற்பாடுகளின்படி சபாநாயகரால் அந்தச் சான்றிழைப் பதிவு செய்ய முடியாது.

மேலும், ஆணைக்குழுவின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளைச் சபையில் சமர்ப்பித்தமை போன்ற நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட முடியாது.

இது வெறுமனே அரசமைப்புச் சார்ந்த பிரச்சினை மட்டுமல்லாது, நலன் முரண்பாடு தொடர்பான கடுமையான சட்ட மற்றும் ஒழுக்கவியல் பிரச்சினையாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினையை இன முரண்பாடாகத் திரிபுபடுத்த வேண்டாம்! – சாணக்கியன் வலியுறுத்தல்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினையை இனவாத முரண்பாடாகத் திரிபுபடுத்தி, உண்மைக்குப் புறம்பான செய்திகளைச் சில ஊடகங்கள் வெளியிட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்…

1 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிற்றுண்டிச்சாலைகளுக்குத் தண்டப்பணம்!

சுகாதார நடைமுறைகளைத் தொடர்ச்சியாகப் பின்பற்றத் தவறிய கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிற்றுண்டிச்சாலைகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், இரு சிற்றுண்டிச்சாலைகளைத் தற்காலிகமாக மூடுமாறும் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிழக்கு…

79 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசுக்கு ஆதரவாக மாத்தறையிலும் பேரணி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, ‘ஜனவரம புரவசியோ’ (மக்கள் ஆணைக்கான பிரஜைகள்) அமைப்பின் ஏற்பாட்டில் மாத்தறையில்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாவீரர்களுக்கான அஞ்சலியுடன் ஆரம்பமான பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் காலை 10:00 மணியளவில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டு ஆரம்பமானது. இதில் முதலாவதாக சென்ற கூட்ட…

77 0 0