உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இறையாண்மை, தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய ஒப்பந்தங்களை இரகசியமாக மேற்கொள்ளவே கூடாது.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
123 பார்வைகள்

இலங்கையின் இறையாண்மை, சுயாதீனம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய எந்தவொரு ஒப்பந்தத்தையும் இரகசியமாக மேற்கொள்ளாது, அதன் முழுமையான விவரங்களை நாடாளுமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார்.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் 38 வருடங்களுக்குப் பின்னரான இலங்கை விஜயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“38 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வந்துள்ள நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடனான சந்திப்பில் மாணவர் பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு கல்வி நிறுவனங்கள் தொடர்பில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. எனினும், கடந்த 2025 ஏப்ரல் 5ஆம் திகதி இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.

இது குறித்து வினவியபோது, இந்தியாவின் அனுமதியின்றி அதனை வெளிப்படுத்த முடியாது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை கண்டிக்கத்தக்கது. இலங்கை மக்களுக்கு ஒப்பந்தங்களை வெளிப்படுத்த வெளிநாட்டின் அனுமதி ஏன் தேவைப்படுகின்றது?

இந்தியா நட்பு நாடாக இருப்பினும், இலங்கையின் அரசமைப்பு விடயத்தில் 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும் வடக்குக்கு அதிகாரங்களைப் பகிரவும் வெளிநாட்டு அரசு அழுத்தம் கொடுப்பது நாட்டின் இறையாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

கொழும்பு துறைமுகக் கப்பல் தளத்தின் 51 சதவீத பங்குகள் இந்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம், டிஜிட்டல் அடையாள அட்டை மற்றும் இந்தியா – இலங்கை பாலம் தொடர்பான விடயங்கள் தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் கவனமாக ஆராயப்பட வேண்டும்.

வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்கள் தொடர்ந்தும் எதிர்கொள்ளும் வாழ்வாதார மற்றும் எல்லைப் பிரச்சினைகளும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பின்போது உரிய முறையில் கலந்துரையாடப்பட்டிருக்க வேண்டும்.

நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்குத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அனைத்து உடன்படிக்கைகளையும் வெளிப்படைத்தன்மையுடன் நாடாளுமன்றத்துக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிற்றுண்டிச்சாலைகளுக்குத் தண்டப்பணம்!

சுகாதார நடைமுறைகளைத் தொடர்ச்சியாகப் பின்பற்றத் தவறிய கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிற்றுண்டிச்சாலைகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், இரு சிற்றுண்டிச்சாலைகளைத் தற்காலிகமாக மூடுமாறும் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிழக்கு…

79 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசுக்கு ஆதரவாக மாத்தறையிலும் பேரணி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, ‘ஜனவரம புரவசியோ’ (மக்கள் ஆணைக்கான பிரஜைகள்) அமைப்பின் ஏற்பாட்டில் மாத்தறையில்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாவீரர்களுக்கான அஞ்சலியுடன் ஆரம்பமான பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் காலை 10:00 மணியளவில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டு ஆரம்பமானது. இதில் முதலாவதாக சென்ற கூட்ட…

77 0 0
இலங்கை செய்திகள்

செம்மணியின் 4 ஆவது இடைக்கால அறிக்கை உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல்!!

செம்மணி விவகாரம் தொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் கூறப்பட்ட ஆய்வுகளை, 4ஆவது இடைக்கால அறிக்கை தலைகீழாக மாற்றி எழுதியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதுவரை கண்டெடுக்கப்பட்ட எச்சங்களில்…

90 0 0