உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடன் சிலோன் மீடியா போரம் உயர்மட்டக் கலந்துரையாடல்

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
112 பார்வைகள்

“இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்” (Sri Lanka Journalists’ Trust Fund) ஸ்தாபிப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் இன்று (10) வியாழக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் தகவல் தொழில்நுட்ப மையத்தில் இடம்பெற்றது.

வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம். முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் தலைமையிலான ஊடகக் குழுவினரும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில், ஸ்தாபிக்கப்படவுள்ள நிதியத்தின் நோக்கங்கள், செயற்பாடுகள், நிதி மூலோபாயம் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு குறித்து பேராசிரியர் எம்.ஐ.எம். ஹிலால் விரிவான கணினித் திரைக் காட்சி (Presentation) மூலம் விளக்கமளித்தார்.

இக்கலந்துரையாடலில் பேராசிரியர் எம்.ஐ.எம். ஹிலால் மற்றும் கலாநிதி எம்.ஐ.எம். றியாத் ஆகியோரும் கலந்துகொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

சிலோன் மீடியா போரத்தின் சார்பில் அதன் செயலாளர் நூருல் ஹுதா உமர், உப தலைவர் எஸ். தஸ்தகீர், அமைப்பாளர் எம்.வை. அமீர், உப செயலாளர் என்.எம். அப்றாஸ், செயற்குழு உறுப்பினர்களான எஸ். ஜனூஸ், என்.எம். சிறாஜுதீன், ஏ.வி.எம். ராஜித், மற்றும் ஜே.எம். வாசித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், “ஸ்தாபிக்கப்படவுள்ள ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியமானது நாட்டின் அனைத்து இன ஊடகவியலாளர்களின் நலன்களையும் உள்ளடக்கியது. எனவே, அனைத்து ஊடகவியலாளர்களும் ஒன்றிணைந்து இத்திட்டத்திற்கு தங்களது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கு, மலையக எம்.பிக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விசேட பேச்சு

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள…

127 0 0
இலங்கை செய்திகள்

இலங்கைத் தமிழரை செருப்பால் அடிக்க பாய்ந்த மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ஆட்சியர்

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்  சார்    ஆட்சியர் கலை மன்னன் அவர்களிடம்   விடுப்பு    கேட்டு வந்த   வந்த இலங்கைத் தமிழரை தகாத வார்த்தையில் பேசி…

117 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் தாமதம் : தெரிவுக்குழுக் கூட்டத்தைப் புறக்கணித்த எதிரணி

மாகாண சபைத் தேர்தல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் 10ஆவது கூட்டத்தை நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று புறக்கணித்தனர். நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான…

95 0 0
இலங்கை செய்திகள்

சிங்காரவத்தை தோட்டப் பகுதியில் சிறுத்தை புலியின் அச்சுறுத்தல்!

பொகவந்தலாவ சிங்காரவத்த தோட்டம் பகுதியில் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள தேயிலை மலையில் 09.09.2026.புதன்கிழமை காலை சிறுத்தை புலி ஒன்று இனங்கானப்பட்டுள்ளது இதன் காரணமாக குறித்த பகுதியில் தொழிலுக்கு…

102 0 0