சிங்காரவத்தை தோட்டப் பகுதியில் சிறுத்தை புலியின் அச்சுறுத்தல்!
பொகவந்தலாவ சிங்காரவத்த தோட்டம் பகுதியில் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள தேயிலை மலையில் 09.09.2026.புதன்கிழமை காலை சிறுத்தை புலி ஒன்று இனங்கானப்பட்டுள்ளது
இதன் காரணமாக குறித்த பகுதியில் தொழிலுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர்
நேற்றையதினம் காலை வேளையில் குறித்த சிறுத்தை புலி தேயிலை மலையில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்ததை பொதுமக்கள் இனங்கண்டு தமது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்துள்ளனர்
இந்த சம்பவம் தொடர்பில் நல்லதன்னி வனவிலங்கு அதிகாரிகளும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
இதேவேளை பொகவந்தலாவ தெரேசியா தோட்டம் பகுதியில் கடந்தவாரம் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளாகி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
இதேவேளை இந்த தோட்ட பகுதியில் சிறுத்தை புலியின் நடமாற்றம் காரணமாக வளர்ப்பு நாய்களும் காணாமல் போயுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்
இந்த விடயம் குறித்து வனவிலங்கு அதிகாரிகள் கவனம் செலுத்தி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிங்காரவத்தை தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்