உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

19 நிலக்கரி கப்பல்களில் 1,20,000 மெட்ரிக் தொன் நிலக்கரி காணாமல் போயுள்ளது.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
64 பார்வைகள்

அரசாங்கத்தின் வாக்குறுதிகள், ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைக் கடுமையாகச் சாடி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.

அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட 19 நிலக்கரி கப்பல்களில் சுமார் 1,20,000 மெட்ரிக் தொன் நிலக்கரி காணாமல் போயுள்ளதாகவும், இதன் சந்தை மதிப்பு ரூ. 462 கோடியாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இரண்டு நிலக்கரி கப்பல்களின் அளவிற்கு இணையான இந்த இழப்பிற்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்பிய அவர், அரசாங்கம் வாங்கிய பின்னரே நிலக்கரியைச் சாப்பிட்டுள்ளதாகக் சாடினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

பணவீக்கத்திற்கு ஏற்ப அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும் என்றும், 10% சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும், இன்று செவனகல தொழிற்சாலையின் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டு, சம்பளம் குறைக்கப்பட்டு, தொழிற்சாலையே மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

குறைந்த காலத்தில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என உறுதியளித்துவிட்டு, ரூ. 6,000 ஆக இருந்த கட்டணத்தை தற்போது ரூ. 8,000 ஆக உயர்த்தியுள்ளதையும், எரிபொருள் மீதான வரிகள் நீக்கப்படும் எனக் கூறிவிட்டு லீற்றருக்கு ரூ. 30 கூடுதல் வரி விதித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கான VAT வரியும் நீக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

விவசாயம் மற்றும் வேலைவாய்ப்புத் துறையிலும் அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளதாகக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, ரூ. 150க்கு நெல் கொள்முதல் செய்யப்படும் எனக் கூறிய போதிலும் உரமும் தண்ணீரும் சரியான நேரத்தில் வழங்கப்படவில்லை என்றார்.

அரிசி இறக்குமதி செய்யப்பட மாட்டாது எனக் கூறிவிட்டு தற்போது இறக்குமதி செய்யப்படுவதாகவும், பட்டதாரிகளுக்கு 35,000 வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் எனக் கூறி அவர்களை அரசியல் ரீதியாகப் பயன்படுத்திவிட்டுக் கைவிட்டுவிட்டதாகவும் கூறினார்.

மேலும், நாட்டின் நிதி அமைச்சிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக ஜனாதிபதி கூறினாலும், கிராமங்களில் எந்தவொரு அபிவிருத்திப் பணிகளும் நடைபெறவில்லை என்று தெரிவித்த அவர், ஹேக்கர்கள் மூலம் 2.5 மில்லியன் டொலர்கள் காணாமல் போயுள்ளதாகவும், துறைமுகத்தில் 323 கொள்கலன்கள் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருள் கொள்கலனைக் கைப்பற்றிய பொலிஸ் அதிகாரிக்கே எதிராக விசாரணை நடத்தப்படுவதாகக் கூறிய அவர், அரசாங்கத்தின் பொய்கள், ஊழல்கள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று அனுராதபுரத்தில் கட்சி பேதமின்றி ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்துள்ளதாகவும், நீதிமன்றம், சிறைச்சாலை அல்லது அடக்குமுறைகளைக் காட்டி இந்த மக்கள் போராட்டத்தை அரசாங்கத்தால் தடுத்து நிறுத்த முடியாது என்றும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அராலி கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தமைக்கான காரணம் வெளியானது.!

அராலி கிழக்கு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு உட்பட அங்கு இருந்த சில கிணறுகள் கடந்த சில தினங்களாக நீர்மட்டம் வழமைக்கு மாறாக உயர்ந்து காணப்பட்டது.…

99 0 0
இலங்கை செய்திகள்

எட்டு ஆண்டுகளாக காணாமல் போன மகனைத் தேடும் தந்தை.!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் கிராமத்தை பிறப்பிடமாகவும், குடத்தனை கிழக்கு மளிகைத்திடலை வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா அருந்தவச்செல்வன் கடந்த 2018 ஆம் ஆண்டு 3 ஆம் மாதத்திலிருந்து…

70 0 0
இலங்கை செய்திகள்

பயணச் சீட்டுகளை வழங்காமல் முறைகேடுகளில் ஈடுபட்ட பேருந்தின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்.!

சேவையில் ஈடுபடும் போது பயணிகளுக்கு உரிய பயணச்சீட்டுகளை வழங்காமல் தொடர்ச்சியாக முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட பேருந்தின் அனுமதிப்பத்திரத்தை ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு…

119 0 0
இலங்கை செய்திகள்

யாழில் அவசரமாக விடுவிக்கப்பட வேண்டிய காணிகள்; ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்.!

நூற்றுக்கணக்கான குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்கு வழிவகுக்கும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் பயன்பாட்டில் இருந்து இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி, நிலங்கள் மற்றும்…

112 0 0