உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

பயணச் சீட்டுகளை வழங்காமல் முறைகேடுகளில் ஈடுபட்ட பேருந்தின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்.!

இலங்கை செய்திகள் 51 நிமிடங்கள் முன்
120 பார்வைகள்

சேவையில் ஈடுபடும் போது பயணிகளுக்கு உரிய பயணச்சீட்டுகளை வழங்காமல் தொடர்ச்சியாக முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட பேருந்தின் அனுமதிப்பத்திரத்தை ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் அறிவித்துள்ளார்.

குறித்த பேருந்து தொடர்பில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளை மீறி, சேவையின்போது பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்காமல் நான்கு தடவைகளுக்கு மேல் சேவையில் ஈடுபட்டமையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பேருந்தின் அனுமதிப்பத்திரம் 2026 செப்டெம்பர் 10ஆம் திகதி முதல் 2026 ஒக்ரோபர் 9ஆம் திகதி வரை ஒரு மாத காலத்துக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகளை ஒழுங்குமுறைக்கு உட்படுத்தி, பயணிகளுக்கு பாதுகாப்பானதும் நம்பகமானதுமான சேவையை உறுதி செய்வதற்காக அதிகார சபையால் கண்காணிப்பு மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இவ்வாறான முறைகேடுகள் தொடர்ந்தும் இடம்பெறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பேருந்துகளுக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளையோ, வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் செயற்பாடுகளையோ, அல்லது நடத்துநர்கள் மற்றும் சாரதிகளின் தரக்குறைவான செயற்பாடுகளையோ அவதானித்தால் எவ்வித தயக்கமின்றி முறைப்பாடு செய்ய முடியும். இவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொளிகள்) 071 9090900 என்ற வாட்ஸ்அப் இலக்கத்துக்குப் பொதுமக்கள் உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேங்காய்களை ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து கோர விபத்து!

குருநாகல் – கண்டி வீதியில், கலகெதர பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள சரிவுப் பகுதியில் உரித்த தேங்காய்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று இன்று காலை கட்டுப்பாட்டை இழந்த…

107 0 0
இலங்கை செய்திகள்

அராலி கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தமைக்கான காரணம் வெளியானது.!

அராலி கிழக்கு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு உட்பட அங்கு இருந்த சில கிணறுகள் கடந்த சில தினங்களாக நீர்மட்டம் வழமைக்கு மாறாக உயர்ந்து காணப்பட்டது.…

100 0 0
இலங்கை செய்திகள்

எட்டு ஆண்டுகளாக காணாமல் போன மகனைத் தேடும் தந்தை.!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் கிராமத்தை பிறப்பிடமாகவும், குடத்தனை கிழக்கு மளிகைத்திடலை வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா அருந்தவச்செல்வன் கடந்த 2018 ஆம் ஆண்டு 3 ஆம் மாதத்திலிருந்து…

71 0 0
இலங்கை செய்திகள்

யாழில் அவசரமாக விடுவிக்கப்பட வேண்டிய காணிகள்; ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்.!

நூற்றுக்கணக்கான குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்கு வழிவகுக்கும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் பயன்பாட்டில் இருந்து இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி, நிலங்கள் மற்றும்…

113 0 0