உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
9 புதன்

பலத்த காற்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
103 பார்வைகள்

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்காகப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குறித்து எச்சரிக்கை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (09) முற்பகல் 11 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிக்கை நாளை (10) வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடலோரத்திற்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளில் கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறிப்பிட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை…

94 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இரு ஆண்டுகளில் மக்களை ஏமாற்றியுள்ளது.!

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா, தேசிய…

105 0 0
இலங்கை செய்திகள்

கன மழை காரணமாக சிவனடிபாத மலை உச்சியில் இருந்து குப்பைகள் சரிவு.!

கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கன மழை காரணமாக சிவனடிபாத மலை உச்சியில் இருந்த குப்பைகள் சரிந்துள்ளது. தற்போது அடிக்கடி இவ்வாறான…

110 0 0
இலங்கை செய்திகள்

இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பின் உயரிய கௌரவம்.!

இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறையில் எட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இரு சாதனைகளைப் பாராட்டி, உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கைக்கு உயரிய அதிகாரப்பூர்வ கௌரவச் சான்றிதழை வழங்கிச்…

84 0 0