உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
9 புதன்

22ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதில் ஜனாதிபதியின் கருத்தில் எந்த முரண்பாடும் இல்லை.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
81 பார்வைகள்

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை விரைவாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டதில் எந்த முரண்பாடும் இல்லை என்று அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

களுத்துறை, புளத்சிங்கள பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரை தொடர்பில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அரசமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அவசியமானவை என்பதால், அதனை நாடாளுமன்றத்தில் விரைவாகச் சமர்ப்பித்து நிறைவேற்றுவதாகவே ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஒருவேளை உயர்நீதிமன்றம் இந்தச் சட்டமூலத்துக்குச் சர்வஜன வாக்கெடுப்பு (மக்கள் தீர்ப்பு) அவசியம் என உத்தரவிட்டால், அதனை எதிர்கொள்வதிலும் அரசுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

இதற்கிடையில், அரசின் இந்தத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட மற்றும் அரசியல் ரீதியிலான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காகச் சுதந்திர செயற்பாட்டு மையம், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியுடன் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதில் அரசின் சார்பில் திட்டமிட்ட தாமதம் எதுவும் இல்லை. சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறைகளில் ஏற்படும் இயல்பான நடைமுறைத் தாமதங்களே இதற்குக் காரணம். இது நீண்டகால யுத்தம், பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய பரந்த விடயமாகும்.

மேலும், அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு நேரடியாகத் தொடர்புடையது என்பதால், அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டியுள்ளது.

சந்தேகநபர்களைக் கைது செய்வது தொடர்பான பொலிஸாரின் நடைமுறை விளக்கங்களும் சட்ட வரையறைகளும் சிக்கலானதாக அமைந்திருப்பதும் தாமதத்துக்கு மற்றொரு காரணமாகும். எவ்வாறாயினும், அரசு அளித்த வாக்குறுதியின்படி, பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற்று நாட்டின் அனைத்துத் தரப்பினருக்கும் நீதி கிடைக்கும் வகையில் மிக விரைவில் இதற்கான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை…

94 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இரு ஆண்டுகளில் மக்களை ஏமாற்றியுள்ளது.!

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா, தேசிய…

105 0 0
இலங்கை செய்திகள்

கன மழை காரணமாக சிவனடிபாத மலை உச்சியில் இருந்து குப்பைகள் சரிவு.!

கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கன மழை காரணமாக சிவனடிபாத மலை உச்சியில் இருந்த குப்பைகள் சரிந்துள்ளது. தற்போது அடிக்கடி இவ்வாறான…

109 0 0
இலங்கை செய்திகள்

பலத்த காற்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்காகப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குறித்து எச்சரிக்கை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று (09) முற்பகல் 11 மணிக்கு…

102 0 0