உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
9 புதன்

சிறைக்குச் சென்றவர்கள் நாடாளுமன்றத்துக்கு வந்து பொருளாதார ஆலோசனை கூறுவது வேடிக்கையானது.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
97 பார்வைகள்

மக்களின் வரிப்பணத்தை இலஞ்சமாகப் பெற்றுச் சிறையில் உள்ளவர்கள் இன்று நாடாளுமன்றத்துக்கு வந்து அரசுக்குப் பொருளாதார மேம்பாடு பற்றி ஆலோசனை வழங்குவது வேடிக்கையாக உள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தருவன் மதரசிங்ஹ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மோட்டார் வாகனக் கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“ஊரில் உள்ளவர்கள் ஏதாவது குற்றச்செயலுக்காகச் சிறைக்குச் சென்றால் வெட்கத்தால் வெளியில் வரமாட்டார்கள். பிறருடன் கதைக்கக்கூட மாட்டார்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் அவ்வாறான நிலைமையைக் காண முடியவில்லை.

ஊழல், மோசடிச் சம்பவங்களுக்காகச் சிறைக்குச் சென்றவர்கள் இன்று நாடாளுமன்றத்துக்குள் வந்து பொருளாதார மேம்பாடு பற்றிக் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். விவசாயிகளுக்கு உரம் இல்லை என்று கூறும் நாமல் ராஜபக்ஷதான், அன்று கழிவு உரத்தை இறக்குமதி செய்து நாட்டின் விவசாயத்தை அழிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாகக் கையுயர்த்தினார்.

அரசியல் பழிவாங்கலுக்காகவே நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார் என்று எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிடுகின்றார்.

எயார்பஸ் கொள்வனவு விவகாரத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போதெல்லாம் அவர்களின் உடல்நலம் குறித்து வெளிநாட்டு மருத்துவமனைகளே அறிக்கை சமர்ப்பிக்கின்றன. நாட்டில் உள்ள அரச மருத்துவக் கட்டமைப்பை வினைத்திறனாக்கும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கும்போது இவர்கள் அதற்கு எதிராகச் செயற்படுகின்றார்கள்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை…

94 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இரு ஆண்டுகளில் மக்களை ஏமாற்றியுள்ளது.!

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா, தேசிய…

106 0 0
இலங்கை செய்திகள்

கன மழை காரணமாக சிவனடிபாத மலை உச்சியில் இருந்து குப்பைகள் சரிவு.!

கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கன மழை காரணமாக சிவனடிபாத மலை உச்சியில் இருந்த குப்பைகள் சரிந்துள்ளது. தற்போது அடிக்கடி இவ்வாறான…

110 0 0
இலங்கை செய்திகள்

பலத்த காற்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்காகப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குறித்து எச்சரிக்கை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று (09) முற்பகல் 11 மணிக்கு…

103 0 0