உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
25 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாமலின் கைது பழிவாங்கல் அல்ல; சாதாரண சட்ட நடைமுறை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
165 பார்வைகள்

“நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளமையை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக நான் கருதவில்லை. அவரது கைது இளைஞர்கள் மத்தியில் எவ்வித கோபத்தையும் ஏற்படுத்தவில்லை.” – என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசு சிறப்பாகச் செயற்பட்டு வருவதால் எதிர்க்கட்சிகளின் இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் போலிப் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தால் மட்டுமே அதனை அரசியல் பழிவாங்கல் எனக் கூற முடியும். மாறாக, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது சாதாரண சட்ட நடைமுறையாகும். எனவே, அதில் அரசியல் பழிவாங்கல் எதுவும் இல்லை.

அந்தவகையில், நாமல் ராஜபக்ஷவின் கைது நடவடிக்கையில் நான் எவ்வித தவறையும் காணவில்லை. சட்டத்தை அமுல்படுத்துவது பழிவாங்கும் நடவடிக்கையா அல்லது அரன் கடமையா என்பது நீதிமன்றத் தீர்ப்பின் மூலமே தெளிவுபெறும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஞானசார தேரரை விடுவிக்க கோரும் சத்தியாகிரகம் இன்றும் தொடர்கிறது!

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி  பிக்குமார்களால் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாகிரக போராட்டம் இன்று (25) 10 ஆவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த 16…

63 0 0
இலங்கை செய்திகள்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு

வடக்கு அந்தமான் தீவுகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…

80 0 0
இலங்கை செய்திகள்

செம்மணியில் சர்வதேச தடயவியல் விசாரணை நடத்த வேண்டும் – கனேடிய அதிகாரிகளிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் சுயாதீனமான தடயவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கனேடிய வெளிவிவகாரத் திணைக்கள…

80 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை பிரதான வீதியில் யானைகள் அட்டகாசம்!

அம்பாறை மாவட்டம், கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள ‘அக்ரம் பார்ம் ஹவுஸ்’ (Akram Farm House) முன்பாக உள்ள லங்கா சத்தோச நிறுவனத்தின் களஞ்சியசாலை மற்றும் அதனை…

76 0 0