உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

கல்முனையில் 160 ஆவது பொலிஸ் தின நிகழ்வு; பள்ளிவாசலில் சிறப்பு துஆப் பிரார்த்தனை.!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
147 பார்வைகள்

160 ஆவது பொலிஸ் தின விழாவை முன்னிட்டு கல்முனையில் விசேட துஆப் பிரார்த்தனை நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி களுவாராச்சியின் தலைமையில், கல்முனை பொலிஸ் ஆலோசனைக் குழுவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஐ.எம். ஜிப்ரியின் நெறிப்படுத்தலில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்முனை முகையதீன் பள்ளிவாசலில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு அல்-ஹாஜ் உஸ்தாத் மெளலவி சபா முஹம்மத் ஆலிம் நஜாஹி முகத்தமுல் காதிரி தலைமை தாங்கி துஆப் பிரார்த்தனையை வழிநடத்தினார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராச்சியும், கெளரவ அதிதியாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் விக்ரமரட்னவும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் பொலிஸ் ஆலோசகக் குழு உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், உலமாக்கள், மௌலவிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பாதுகாப்பற்ற குழியில் விழுந்து சிறுவன் உ*யிரிழப்பு; கைதான தொழில்நுட்ப உதவியாளருக்கு விளக்கமறியல்.!

பாலம் அமைப்படும் இடத்திற்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் விழுந்து ஆறு வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆயித்தியமலை பொலிசாரினால் கைது செய்யப்பட்ட பாலம்…

103 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையை வந்தடைந்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்.!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இலங்கை வந்தடைந்துள்ளார். செப்டெம்பர் 10ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த விஜயத்தில், ஜனாதிபதி…

116 0 0
இலங்கை செய்திகள்

நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னரே ஜனாதிபதி கருத்து வெளியிடுவது நீதித்துறைக்கு அவமதிப்பு.!

22வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நீதிமன்றம் தனது கருத்தை வெளியிடுவதற்கு முன்னரே ஜனாதிபதி, மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படாது என அறிவித்திருப்பது நாட்டின் நீதித்துறை அமைப்புக்கு செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய…

88 0 0
இலங்கை செய்திகள்

வைத்தியசாலையில் நீண்டகாலமாக போ*தைப்பொருள் வியாபாரம்; இருவர் கைது.!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இரு ஊழியர்கள், மருதானைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும்…

121 0 0