உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

இன்றைய ராசி பலன்கள் – 08.09.2026

ராசி பலன்கள் 8 மணி நேரம் முன்
119 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியைத் தரும். இன்று முருகர் வழிபாடு செய்து பாருங்கள், உங்கள் பலநாள் கஷ்டத்திற்கு உடனடியாக ஒரு தீர்வு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். சேமிப்பை உயர்த்தலாம். வீண் வம்பு வழக்குகள் உங்களை விட்டு விலகும். மன நிம்மதி கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வண்டி வாகனம் ஓட்டும்போது மட்டும் கூடுதல் கவனத்தோடு செயல்படுங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷத்திற்கு அளவிருக்காது. வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். பிள்ளைகளுடைய நலனில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சுப செலவுகள் ஏற்படும். வருமானத்தில் இருந்து வந்த தடை விலகும். வராத கடன் வசூல் ஆகும். சில பேருக்கு சொத்து வாங்கக் கூடிய யோகமும் கைக்கூடி வரும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று யோகமான நாளாக இருக்கும். நீண்ட நாள் செய்ய முடியாத வேலைகளை கையில் எடுத்தால் இன்று சுலபமாக செய்து முடிக்கலாம். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனஸ்தாபம் சரியாகும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் காணப்படும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆர்வம் அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் ஈடுபாட்டோடு செயல்படுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டு. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். காரியத்தடை விலகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. வீண்விரைய செலவை குறைத்துக் கொள்ளுங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம், பதட்டம் இருக்கும். புது முடிவுகள் எடுக்கும் போது சின்னச் சின்ன தடுமாற்றங்கள் வரலாம். இறை நம்பிக்கை வையுங்கள். அனுபவசாலிகள் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. கூடுமானவரை நீண்ட தூர பயணத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அலைச்சலாக இருக்கக்கூடிய வேலையை இன்று செய்யாதீர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். செல்லும் இடமெல்லாம் சீரும் சிறப்புமான மரியாதை கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எந்த இடத்தில் மரியாதையை இழந்தீர்களோ, மீண்டும் அந்த இடத்தில் இருந்தே உங்களுடைய மரியாதையை மீட்டெடுக்கக்கூடிய நல்ல வாய்ப்பை இறைவன் கொடுப்பான். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று செலவு கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சேமிப்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். தெரியாத நபருக்கு கடன் கொடுக்க வேண்டாம். யாருக்காவது பணம் கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்றால் கூட, ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். சொத்து பிரச்சினைகள் சரியாகும். பல நாள் குடும்ப பஞ்சாயத்துக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். சேமிப்பு அதிகரிக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். முன்கோபம் வேண்டாம். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். புது வேலை தேடுவதில் அக்கறை காட்டலாம் தவறு கிடையாது. இருந்தாலும் புது வேலை கிடைக்கும் வரை கையில் இருக்கும் வேலையை விடக்கூடாது அதுதான் புத்திசாலித்தனம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சின்னச் சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கைநீட்டி கடன் வாங்க வேண்டாம். கடன் வாங்கி எந்த ஒரு பொருளையும் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையை விட்டு விடுங்கள். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் இருக்கட்டும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். உங்களுடைய முயற்சிகள் வெற்றி அடையும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். குடும்ப உறவுகளோடு இருந்து வந்த மனகசப்பு நீங்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.‌ உணவு பழக்கவழக்கத்தில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடு தேவை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 07.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். வேலைகளை சிரமம் பார்க்காமல் செய்யுங்கள். சோம்பேறித்தனம் வேண்டாம்.…

98 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் சின்ன பதட்டம் பயம் இருக்கும். புது முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளி போடுங்கள். இன்று அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால்…

69 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 04.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். ஆன்மீக வழிபாட்டின் மூலம் மனம் நிம்மதி அடையும். தேவையற்ற சங்கடங்கள் நீங்கும். உறவுகளோடு இருந்து வந்த மனக் கசப்பு…

72 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று காதுக்கு இனிமை தரும் நல்ல செய்தி வந்து சேரும். நீண்ட நாள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். வெற்றி வாகை சூட கூடிய…

79 0 0