உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பதக்கங்களை வென்று மலையகத்திற்குப் பெருமை சேர்த்த வீரர்களுக்கு வரவேற்பு

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
78 பார்வைகள்

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூரில் கடந்த 7ஆம் திகதி முதல் நடைபெற்ற Open Championship தடகளப் போட்டியில் பங்கேற்று, இரண்டு தங்கப் பதக்கங்களையும்,  மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் வென்று இன்று அதிகாலை இலங்கைக்குத் திரும்பிய விளையாட்டு வீரர்களான மனுவேல் சத்தியசீலன் மற்றும் துரைசாமி விஜிந்த் ஆகிய இருவரையும், சமூக சேவையாளரும்,  பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் (VOPP) நிறைவேற்றுப் பணிப்பாளருமான அன்டனி ஜேசுதாஸன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்று, பாராட்டுத் தெரிவித்தார்.

வீரர்கள் இருவரும் தங்களது திறமையாலும் விடாமுயற்சியாலும் மலையகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளதுடன், ஏனைய இளைஞர்களுக்கும் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றனர் என அன்டனி ஜேசுதாஸன் தெரிவித்தார்.

இவ்விரு வீரர்களும் இதற்கு முன்னரும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ள போதிலும், அவர்களுக்குக் கிடைக்கும் அரசாங்கத்தின் ஆதரவு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

திறமையும் அர்ப்பணிப்பும் கொண்ட இவ்வாறான விளையாட்டு வீரர்களை அரசாங்கமும் உரிய தரப்பினரும் அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்க முன்வர வேண்டும்.

இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை வளர்ப்பதன் மூலம், எதிர்காலத்தில் இலங்கைக்குப் பெருமை சேர்க்கும் மேலும் பல சாதனையாளர்களை உருவாக்க முடியும் என்றும் அண்டனி யேசுதாசன் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினையை இன முரண்பாடாகத் திரிபுபடுத்த வேண்டாம்! – சாணக்கியன் வலியுறுத்தல்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினையை இனவாத முரண்பாடாகத் திரிபுபடுத்தி, உண்மைக்குப் புறம்பான செய்திகளைச் சில ஊடகங்கள் வெளியிட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்…

74 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிற்றுண்டிச்சாலைகளுக்குத் தண்டப்பணம்!

சுகாதார நடைமுறைகளைத் தொடர்ச்சியாகப் பின்பற்றத் தவறிய கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிற்றுண்டிச்சாலைகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், இரு சிற்றுண்டிச்சாலைகளைத் தற்காலிகமாக மூடுமாறும் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிழக்கு…

86 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசுக்கு ஆதரவாக மாத்தறையிலும் பேரணி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, ‘ஜனவரம புரவசியோ’ (மக்கள் ஆணைக்கான பிரஜைகள்) அமைப்பின் ஏற்பாட்டில் மாத்தறையில்…

78 0 0
இலங்கை செய்திகள்

மாவீரர்களுக்கான அஞ்சலியுடன் ஆரம்பமான பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் காலை 10:00 மணியளவில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டு ஆரம்பமானது. இதில் முதலாவதாக சென்ற கூட்ட…

81 0 0