உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

புனித தோமையார் வாசாப்பு நாடகம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
72 பார்வைகள்

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டி ஆலய சபை மற்றும் கிராம மக்கள் இணைந்து வழங்கிய ‘புனித தோமையார் வாசாப்பு’ நாடகம் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (6) மாலை முதல் இன்று திங்கள் (7) அதிகாலை வரை சிறப்பாக இடம்பெற்றது.

சமூக ஒற்றுமையை ஏற்படுத்துதல், பெரியவர்களுக்கு மதிப்பளித்தல், கடமை, கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு போன்றவற்றுடன் சமூகத்தை வளர்த்தல், பொது நலன் முன்நிறுத்தப்படல், ஆற்றல்களையும், திறமைகளையும் வெளிப்படுத்துதல் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாக குறித்த நிகழ்வு அரங்கேற்றப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை, கௌரவ விருந்தினர்களாக முருங்கன் மெதடிஸ்த போதகர் அருட்பணி நித்திய ஜீவன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.ஜெகதீஸ்வரன், நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் அன்று ராஜன், மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன், வைத்திய கலாநிதி ஒஸ்மன் சாள்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் கிராம மக்கள் அயல் கிராம மக்கள் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் குறித்த புனித தோமையார் வாசாப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

புனித தோமையார் வாசாப்பு’ நாடகம் கத்தோலிக்க பாரம்பரிய நாடக வடிவங்களில் ஒன்றாகும். புனித தோமையாரின் வரலாறு மற்றும் அவரின் விசுவாசப் பணிகளை மையமாகக் கொண்டு இந்நிகழ்வு தயாரிக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியில்.!

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (07) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற…

63 0 0
இலங்கை செய்திகள்

ராஜபக்ஷ ஆட்சியாளர்களின் ஊழல்களே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்.!

இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, டொலர் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றுக்கு முன்னாள் ஆட்சியாளர்களின் ஊழல்களும் முறைகேடான நிர்வாகமுமே முதன்மைக் காரணம் என இடதுசாரி…

72 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

கலுகலை பகுதியில் உள்ள வீதித் தடை சோதனை சாவடியில் ஜஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று காலை 10 மணிக்கு கித்துல்கல பகுதியில்…

72 0 0
இலங்கை செய்திகள்

மீளப் பெறப்பட்ட யோஷிதவின் மேன்முறையீட்டு மனு.!

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் சதித்திட்டக் குற்றச்சாட்டைத் தொடர்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்…

72 0 0