உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

நாமலுக்கு வீட்டுணவிற்கு அனுமதி.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
110 பார்வைகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுரனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவிற்கு வீட்டிலிருந்து உணவு வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களம் அனுமதி அளித்துள்ளது.

நாமல் ராஜபக்ஷ தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்கவே குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் செனக பல்லேவத்த தெரிவித்துள்ளார்.

எயார்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இலஞ்சம் பெறப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிடடது.

இதற்கமைய, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூண்டுக்கு அண்மித்த பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தினசரி மூன்று நபர்கள் அவரைப் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், நாமல் ராஜபக்ஷவின் தாயாரான சிரந்தி ராஜபக்ஷ இன்று (07) முற்பகல் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று நாமல் ராஜபக்ஷவின் நலன் தொடர்பில் விசாரித்ததாக நமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவும் இன்று முற்பகல் நாமல் ராஜபக்ஷவைப் பார்வையிடுவதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மீளப் பெறப்பட்ட யோஷிதவின் மேன்முறையீட்டு மனு.!

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் சதித்திட்டக் குற்றச்சாட்டைத் தொடர்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்…

68 0 0
இலங்கை செய்திகள்

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கைது.!

அம்பிட்டிய சுமணரத்ன தேரர், மட்டக்களப்புத் தலைமையகப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 31ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின்…

63 0 0
இலங்கை செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா; சில பாடசாலைகளுக்கு விடுமுறை.!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் புதன்கிழமை (09.09.2026) விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு…

59 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கியவர்களிடமிருந்து மீட்கப்பட்ட போ*தைப்பொருள்.!

கொட்டதெனியாவை, தொரொவ்வ பகுதியில் பேருந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த உந்துருளியை செலுத்தி சென்றவரும், பின்னால் அமர்ந்து பயணித்தவரும் தம்பதெனிய…

70 0 0