உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

60 குழந்தைகள் உட்பட 100 பாலஸ்தீனர்களின் எச்சங்களுக்கு இறுதிச்சடங்கு!

உலக செய்திகள் 5 மணி நேரம் முன்
133 பார்வைகள்


வடக்கு காஸாவின் ஜைதுன் பகுதியில் இஸ்ரேலியத் தாக்குதல்களால் இடிந்து வீழ்ந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட 60 சிறுவர்கள் உட்பட சுமார் 100 பாலஸ்தீனர்களின் எச்சங்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டுள்ளன.

காசா நகரின் அல்-மஃமதானி மயானத்தில் நடைபெற்ற இந்த இறுதிச்சடங்கில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அல்லது என்புக்கூடுகளின் பாகங்கள் கஃபன் துணியால் சுற்றப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.

மீட்கப்பட்ட எச்சங்களில் பெரும்பான்மையானவை ‘மாலகா’ எனும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை ஆகும்.
இந்தக்குடும்பத்தில் மட்டும் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

பல வாரங்களாக நடைபெற்ற அகழ்வுக்கு பின்னரே இந்த எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதில் சில எச்சங்கள் 2023 நவம்பரில் நடைபெற்ற தாக்குதல்களுடையவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் காஸாவில் இன்னும் சுமார் 8000 உடல்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கனரக இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்புக் கருவிகளின் பற்றாக்குறை காரணமாகவே உடல்களை மீட்கும் பணி பல மாதங்களாக நீடித்து வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்கா மேலும் தாக்கினால் தீவிர பதிலடி! : ஈரான் கடும் எச்சரிக்கை!!

அதேவேளையில், மேலும் தாக்குதலுக்கு உள்ளானால் “கடுமையான பதிலடி” கொடுக்கப்படும் என்று அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால்…

121 0 0
உலக செய்திகள்

கிரீஸ் விமானக் கண்காட்சியில் பயங்கர விபத்து – இரு விமானிகள் உயிரிழப்பு

கிரீஸின் தலைநகர் ஏதென்ஸுக்கு வடக்கே உள்ள தனாக்ரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற “Athens Flying Week 2026” சர்வதேச விமானக் கண்காட்சியின் போது, கிரேக்க விமானப்படைக்குச் சொந்தமான…

99 0 0
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு தீவிரம்: விமான சேவைகள் இரத்து!

அனாக் கிரகடாவ் (Anak Krakatau) எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை மண்டலம் மற்றும் சாம்பல் காரணமாக, ஜகார்த்தாவிற்குச் சேவை அளிக்கும் இரண்டு விமான நிலையங்கள் உட்பட இந்தோனேசியாவின்…

141 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல் தீவிரம்!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு தரப்பும் பரஸ்பரம் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஈரானுடன்…

109 0 0