உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
132 பார்வைகள்

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, மணல் தீவுகளில் நின்ற 2 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 5 சிறுவர்கள் அடங்கலாக 11 பேரை மீட்டுத் தலைமன்னார் அழைத்து வந்து தலைமன்னார் பொலிஸாரிடம் நேற்றுமுன்தினம் ஒப்படைத்தனர்.

மீட்கப்பட்ட இந்த 11 பேரும் மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டு, நேற்று மன்னார் பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, மீட்கப்பட்ட 11 பேரில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் தலா 2 இலட்சம் ரூபாய் ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்னார் பதில் நீதிவான், அடுத்த தவணைக்கு நீதிமன்றத்தில் சமூகமளிக்கும்போது கிராம சேவகர்களிடம் பதிவு செய்து, அதற்கான பதிவுகளை மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கட்டளையிட்டார். அத்துடன், வழக்கை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு மன்னார் பதில் நீதிவான் ஒத்திவைத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மீளப் பெறப்பட்ட யோஷிதவின் மேன்முறையீட்டு மனு.!

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் சதித்திட்டக் குற்றச்சாட்டைத் தொடர்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்…

68 0 0
இலங்கை செய்திகள்

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கைது.!

அம்பிட்டிய சுமணரத்ன தேரர், மட்டக்களப்புத் தலைமையகப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 31ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின்…

64 0 0
இலங்கை செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா; சில பாடசாலைகளுக்கு விடுமுறை.!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் புதன்கிழமை (09.09.2026) விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு…

59 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கியவர்களிடமிருந்து மீட்கப்பட்ட போ*தைப்பொருள்.!

கொட்டதெனியாவை, தொரொவ்வ பகுதியில் பேருந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த உந்துருளியை செலுத்தி சென்றவரும், பின்னால் அமர்ந்து பயணித்தவரும் தம்பதெனிய…

70 0 0