உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
135 பார்வைகள்

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணியின் நான்காவது தேசிய மாநாடு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் பல்வேறு சவால்களுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியில் எதிர்க்கட்சிகள் செயற்பட வேண்டியுள்ளது. இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்குமாறு எமக்குக் கூறப்பட்டால், அதற்கு அஞ்சி வளைந்துகொடுக்க வேண்டிய அவசியமோ, சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்ச வேண்டிய அவசியமோ எமக்குக் கிடையாது. எமக்கு எந்தவித அச்சமும் இல்லை என்பதை மிகத் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்தே தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. அஞ்சுவதும் இல்லை, வளைந்துகொடுப்பதும் இல்லை என்பதில் நாம் மிகவும் உறுதியாக இருக்கின்றோம்.

வேறுவேறு அரசியல் சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகளாகிய எமக்குள் கருத்து வேறுபாடுகளும் உள்முரண்பாடுகளும் காணப்படலாம். ஆனால், தனிப்பட்ட அல்லது கட்சி நலன்களுக்கு அப்பால் தேசியப் பற்றும் நாட்டின் ஜனநாயக உரிமைகளும் எமக்கு மிக முக்கியமாகும். அந்த வகையில், மக்கள் நலன் சார்ந்து நாம் கொள்கை ரீதியாக இணைந்து செயற்படுவதில் எந்தவிதப் பிரச்சினையோ அல்லது தயக்கமோ எமக்கு இல்லை.

அதேவேளை, மக்கள் ஆணையினால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசு ஒன்றைச் சட்டவிரோதமான முறையிலோ, வன்முறைகள் மூலமாகவோ அல்லது வீதியில் இறங்கி கலவரங்களை ஏற்படுத்தியோ நாம் ஒருபோதும் கவிழ்க்க மாட்டோம்.

எமது கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களோ அல்லது கட்சிகளோ வரலாற்று ரீதியாக அவ்வாறான வன்முறை அரசியலை முன்னெடுத்ததும் இல்லை, அதனை ஆதரித்ததும் இல்லை. ஆனால், அரசை நடத்தி வரும் தற்போதைய ஆட்சியாளர்களே கடந்த காலங்களில் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களையும் கலவரங்களையும் செய்து, அன்றைய அரசுகளை நிலைகுலையச் செய்தனர் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே, எமது எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து யாரும் தேவையின்றிப் பதற்றமடையவோ அல்லது தேவையற்ற அச்சம் கொள்ளவோ வேண்டியதில்லை.

அரசமைப்புக்கு உட்பட்டு, தேர்தல் மூலம் ஜனநாயக வழியிலேயே நாம் இந்த அரசை வீழ்த்துவோம். அது அரசமைப்பு ரீதியாக எதிர்க்கட்சிகளுக்கும் இந்த நாட்டின் மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமையாகும்.

சரியான முறையில், சட்டபூர்வமான தேர்தல் களத்திலேயே இந்த அரசைத் தோற்கடிப்போம் என்ற செய்தியை உறுதியாகக் கூற விரும்புகின்றோம்.

தற்போதைய ஆட்சியாளர்களின் தவறான நிர்வாக நகர்வுகளும் முடிவுகளுமே, அவர்களைத் தேர்தலில் வீழ்த்துவதற்கான சரியான சந்தர்ப்பத்தை எமக்கு ஏற்படுத்தித் தரும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மீளப் பெறப்பட்ட யோஷிதவின் மேன்முறையீட்டு மனு.!

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் சதித்திட்டக் குற்றச்சாட்டைத் தொடர்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்…

68 0 0
இலங்கை செய்திகள்

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கைது.!

அம்பிட்டிய சுமணரத்ன தேரர், மட்டக்களப்புத் தலைமையகப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 31ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின்…

63 0 0
இலங்கை செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா; சில பாடசாலைகளுக்கு விடுமுறை.!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் புதன்கிழமை (09.09.2026) விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு…

59 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கியவர்களிடமிருந்து மீட்கப்பட்ட போ*தைப்பொருள்.!

கொட்டதெனியாவை, தொரொவ்வ பகுதியில் பேருந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த உந்துருளியை செலுத்தி சென்றவரும், பின்னால் அமர்ந்து பயணித்தவரும் தம்பதெனிய…

70 0 0