உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு தீவிரம்: விமான சேவைகள் இரத்து!

உலக செய்திகள் 7 மணி நேரம் முன்
141 பார்வைகள்

அனாக் கிரகடாவ் (Anak Krakatau) எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை மண்டலம் மற்றும் சாம்பல் காரணமாக, ஜகார்த்தாவிற்குச் சேவை அளிக்கும் இரண்டு விமான நிலையங்கள் உட்பட இந்தோனேசியாவின் எட்டு விமான நிலையங்கள் திங்கட்கிழமை (07) அதிகாலையில் தொடர்ந்து மூடப்பட்டிருந்ததாகப் அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.

ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள அனக் கிரகடாவ் எரிமலை வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் செயல்பாட்டிற்கான அறிகுறிகளைக் காட்டி வந்தது.

அதிலிருந்து வெளியேறிய சாம்பல் மற்றும் புகை மண்டலம் ஜகார்த்தாவையும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளையும் சூழ்ந்து கொண்டது.

இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலையங்கள் மூடப்பட்டன.

விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால் 1,70,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனக் கிரகடாவ் எரிமலையின் மிக அண்மைய வெடிப்பு உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 8:23 மணிக்கு நிகழ்ந்ததாக, எரிமலை கண்காணிப்பு அமைப்பின் இணையதளம் தெரிவித்தது.

இந்த வெடிப்புகளால், எரிமலையின் ஜாவா பக்கத்தில் 6,000 மீட்டர் உயரம் வரையிலும், சுமாத்ரா பக்கத்திலும் ஜாவாவில் உள்ள பான்டென் மாகாணத்தின் சில பகுதிகளிலும் 15,000 மீட்டர் உயரம் வரையிலும் சாம்பல் எட்டியுள்ளதாக வானிலை ஆய்வு நிறுவனமான BMKG தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, சாம்பல் காரணமாக மக்கள் வெளியில் பயணம் செய்யும்போது முகக்கவசம் அணியுமாறு பேரிடர் ஆய்வு நிறுவனம் கேட்டுக்கொண்டது.

ஜகார்த்தா மற்றும் லம்பங்கில், மாணவர்களுக்கான சுகாதார அபாயங்களைக் கருத்தில் கொண்டு, பாடசாலைகள் தொலைநிலைக் கற்றலைப் பயன்படுத்தும் என்று அரசு செய்தி நிறுவனமான அன்டாரா தெரிவித்துள்ளது.

இந்தோனேசியா, பசிபிக் “நெருப்பு வளையத்தில்” அமைந்துள்ளது, அங்கு நிலநடுக்கங்களும் எரிமலை வெடிப்புகளும் அடிக்கடி நிகழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்கா மேலும் தாக்கினால் தீவிர பதிலடி! : ஈரான் கடும் எச்சரிக்கை!!

அதேவேளையில், மேலும் தாக்குதலுக்கு உள்ளானால் “கடுமையான பதிலடி” கொடுக்கப்படும் என்று அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால்…

121 0 0
உலக செய்திகள்

60 குழந்தைகள் உட்பட 100 பாலஸ்தீனர்களின் எச்சங்களுக்கு இறுதிச்சடங்கு!

வடக்கு காஸாவின் ஜைதுன் பகுதியில் இஸ்ரேலியத் தாக்குதல்களால் இடிந்து வீழ்ந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட 60 சிறுவர்கள் உட்பட சுமார் 100 பாலஸ்தீனர்களின் எச்சங்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டுள்ளன.…

132 0 0
உலக செய்திகள்

கிரீஸ் விமானக் கண்காட்சியில் பயங்கர விபத்து – இரு விமானிகள் உயிரிழப்பு

கிரீஸின் தலைநகர் ஏதென்ஸுக்கு வடக்கே உள்ள தனாக்ரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற “Athens Flying Week 2026” சர்வதேச விமானக் கண்காட்சியின் போது, கிரேக்க விமானப்படைக்குச் சொந்தமான…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல் தீவிரம்!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு தரப்பும் பரஸ்பரம் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஈரானுடன்…

109 0 0