உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
64 பார்வைகள்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 09 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய மன்னார் மேலதிக நீதிவான் இன்று வியாழக்கிழமை (3) உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இந்திய இழுவைப் படகு ஒன்றுடன் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் குறித்த 9 மீனவர்களும் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த 9 மீனவர்களும் இன்றைய தினம் வியாழக்கிழமை (3) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மேலதிக நீதிவான் 1 ஆம் மற்றும் 2 ஆம் குற்றச்சாட்டுக்களுக்கு 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனையும்,3 ஆவது குற்றச்சாட்டுக்கு நபர் ஒருவருக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் குற்றப் பணமும் செலுத்த நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

மேலும் ஏற்கனவே இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட மீனவர் ஒருவருக்கு இரண்டாவது முறையாக இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டுக்காக 25 ஆயிரம் ரூபாய் குற்றப்பணம் செலுத்தப்பட்ட நிலையில் மேலதிகமாக 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் குறித்த 9 மீனவர்களும் நிபந்தனையின் அடிப்படையில் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட 09 இந்திய மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 09 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய மன்னார் மேலதிக நீதிவான் இன்று வியாழக்கிழமை (03)…

64 0 0
இலங்கை செய்திகள்

வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி திட்டங்களுக்கு முக்கியத்துவம் – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்

. யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி தலைமையில் இன்று (03)…

47 0 0
இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் அதிகார மோகத்தை தோற்கடிக்க வேண்டும் 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அதிகார மோகத்தை முறியடித்து, 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தை வீழ்த்தி, உயரிய நீதிமன்றத்தைப் பாதுகாத்து நிலைநிறுத்தவே ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும்…

53 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை மாற்றும் நடவடிக்கைகள் தற்போதைய அரசின் கீழும் தொடர்கின்றன!

இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் வைபே டி போயரை இன்று சந்தித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், வடக்கு – கிழக்கு தமிழ்…

71 0 0