உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

22ஆவது திருத்தத்திற்கு எதிராக சஜித் தலைமையில் பிரம்மாண்டப் போராட்டம்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
108 பார்வைகள்


அரசாங்கத்தின் மக்கள் விரோத அரசியலமைப்பு 22ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம், வரலாறு காணாத மக்கள் எழுச்சியுடன் மிக பிரம்மாண்டமாக வெற்றிபெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்தில், நாட்டின் நாலாபாகங்களிலிருந்தும் திரண்டு வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உணர்ச்சிப்பூர்வமாகப் பங்கேற்று அரசாங்கத்திற்கு எதிரான தமது பலமான எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

தலைநகரின் முக்கிய போக்குவரத்து மையமான கோட்டை ரயில் நிலையச் சந்தியை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அரசியலமைப்பைத் துஷ்பிரயோகம் செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கையைக் கண்டித்தும், ஜனநாயகத்தைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் கடுமையான கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தின் சிகரமாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் வெள்ளத்தின் மத்தியில் கம்பீரமாகத் தோன்றி, அரசாங்கத்தின் ஜனநாயக விரோத போக்கைக் கடுமையாகத் தாக்கி உரையாற்றினார்.

மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் எந்தவொரு சட்ட மூலத்திற்கும் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் தகுந்த பதிலடி கொடுப்போம் என அவர் இதன்போது சூளுரைத்தார்.

குறுகிய நேரத்திற்குள் மிகக் கச்சிதமாகவும், எழுச்சிப்பூர்வமாகவும், கட்டுப்பாட்டுடனும் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், கோட்டைப் பகுதியையே ஸ்தம்பிக்க வைத்ததுடன், பொதுமக்களின் பேராதரவையும் பெற்றது. எதிர்க்கட்சித் தலைவரின் உரையைத் தொடர்ந்து, போராட்டத்தின் நோக்கம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து, வந்திருந்த மக்கள் வெற்றி மிடுக்கோடு கலைந்து சென்றனர்.

எதிர்க்கட்சிகளின் இந்த அதிரடி நகர்வு, அரசாங்கத்திற்கு பாரிய அரசியல் அழுத்தத்தைக் கொடுத்துள்ளதாகவும், மக்கள் மத்தியில் எதிர்க்கட்சி மீதான நம்பிக்கையை பலமடங்கு அதிகரித்துள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாவீரர்களுக்கான அஞ்சலியுடன் ஆரம்பமான பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் காலை 10:00 மணியளவில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டு ஆரம்பமானது. இதில் முதலாவதாக சென்ற கூட்ட…

69 0 0
இலங்கை செய்திகள்

செம்மணியின் 4 ஆவது இடைக்கால அறிக்கை உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல்!!

செம்மணி விவகாரம் தொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் கூறப்பட்ட ஆய்வுகளை, 4ஆவது இடைக்கால அறிக்கை தலைகீழாக மாற்றி எழுதியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதுவரை கண்டெடுக்கப்பட்ட எச்சங்களில்…

85 0 0
இலங்கை செய்திகள்

ராஜ் சோமதேவா இலங்கை அரசின் கைக்கூலி –  காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி விசனம்!

செம்மணி மனித புதைகுழியின் தொல்லியல் ஆய்வாளர் ராஜ் சோமதேவா தமிழின படுகொலைகளை மூடி மறைக்கும் இலங்கை அரசின் கைக்கூலியாக செயல்பட்டமை அவரது இடைக்கால அறிக்கை எடுத்துக்காட்டுகிறது என…

74 0 0
இலங்கை செய்திகள்

கிரிஷ் நிதி மோசடி வழக்கு:நாமல் எம்.பிக்குமறியல் நீடிப்பு!

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான நிதி மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும்…

62 0 0