உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

கரைச்சி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படும் மண் விநியோகம் தொடர்பில் தவிசாளர் கருத்து.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
42 பார்வைகள்

கரைச்சி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படும் மண் விநியோகம் தொடர்பாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

கரைச்சி பிரதேச சபையினரால் மாவட்டத்தில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகளின் பலனாக, மணல் விநியோகம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு, மாவட்ட அரசாங்க அதிபர், கரைச்சி பிரதேச சபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவை இணைந்து மணல் விநியோகத்தை முறைப்படுத்தியுள்ளன.

எதிர்கொண்ட சவால்கள்
கடந்த 10-15 வருடங்களாக முறைசாராமல் இருந்த வியாபாரத்தை ஒழுங்குபடுத்தும்போது, தனிநபர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் கொலை முயற்சிகள் உட்பட பல கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

மணல் வகைகள் – விலைகள்
கழுவப்படாத மண் களஞ்சியசாலையிலிருந்து ஏற்றி விடுவதற்கு 40,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதிகளில் 10,000 ரூபாயும், ஏனைய பிரிவுகளுக்கு அதற்கு ஏற்ற தொகையையும் டிப்பர் உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். கிளிநொச்சிக்குள் 50,000 முதல் 55,000 ரூபாய்க்குள் பெற்றுக்கொள்ள முடியும்.

கழுவப்பட்ட மண்
1,000-க்கும் மேற்பட்ட டிப்பர்கள் அளவிலான மண் தொடர்ச்சியாகக் கழுவப்பட்டு சேமிக்கப்பட்டு வருகிறது. இதற்கான இறுதி விலை நிர்ணயம் இன்னும் செய்யப்படவில்லை. அரச அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, செலவுகளைக் கணித்து விரைவில் குறைந்தபட்ச விலை அறிவிக்கப்படும்.

மணல் பெறுவதற்கான நடைமுறை பொதுமக்கள் கிராம நிலாதாரி மற்றும் பிரதேச செயலாளரின் சிபாரிசுக் கடிதத்துடன் பிரதேச சபை அலுவலகத்தை அணுகி மணலை பெற முடியும்.

முன்னுரிமை
இந்திய வீட்டுத் திட்டம், அரச மானிய வேலைகள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் போன்ற அபிவிருத்திப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

எச்சரிக்கை
இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். சமூக வலைத்தளங்களில் வலம்வரும் உத்தியோகபூர்வமற்ற தகவல்களையும், தவறான விலை அறிவிப்புகளையும் நம்பி குழப்பமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னாரில் புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை!

மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றும் புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு உயர்த்தப் பட்டும் நிலுவை வழங்கப்படாமை தொடர்பான பாதிக்கப்பட்ட புகையிரத கடவை பணியாளர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை…

41 0 0
இலங்கை செய்திகள்

நெடுந்தீவுக்கும் குறிகாட்டுவானுக்கும் இடையேயான படகு சேவை நேர அட்டவணை வெளியீடு!!

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நாளையதினம் (04/09) தொடக்கம் குமுதினி படகு இணைக்கப்படுவதால் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார் அதனடிப்படையில் படகு…

44 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் பெண்ணோயியல் பிரிவுக்கு ஐந்து மில்லியன் ரூபாய் தொகை வழங்கும் நிகழ்வு.!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்ணோயியல் பிரிவுக்கான கிளி மக்கள் அமைப்பினால் லண்டனில் வாழும் தங்கராஜா…

56 0 0
இலங்கை செய்திகள்

மாமனாரை கொ*லை செய்த மருமகன் கைது.!

கொகரெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலுகடுமெட்டியாவ பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாலுகடுமெட்டியாவ பகுதியிலுள்ள வீடொன்றிற்கு அருகே நேற்று புதன்கிழமை (02)…

79 0 0