உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
63 பார்வைகள்

மூத்த தமிழ்த் தேசியவாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பு தனியார் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குச் சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

சத்திர சிகிச்சையின் பின்னர் கொழும்பில் தங்கியிருந்து தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வாரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று புதன்கிழமை அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைகளை பெற்று வருகின்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இ.தொ.கா. தலைவர் ஆழ்ந்த இரங்கல்.!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கையில் உள்ள நேபாள தூதரகத்துக்கு நேற்று நேரில் சென்று, நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது ஆழ்ந்த…

28 0 0
இலங்கை செய்திகள்

அனுராதபுரத்தில் எதிர்ப்புப் பேரணி நிச்சயம் நடக்கும்.!

அனுராதபுரத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்புப் பேரணியைத் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்றும், எனினும்…

52 0 0
இலங்கை செய்திகள்

அமெரிக்க படையினருடன் இணைந்து இலங்கை விமானப்படை நடத்தும் கூட்டுப் பயிற்சி.!

இலங்கை விமானப்படை, அமெரிக்க தூதரகத்தின் ஒருங்கிணைப்புடன், அமெரிக்காவின் மொன்டானா தேசிய பாதுகாப்புப் படை மற்றும் பசிபிக் வான்படை ஆகியவற்றுடன் இணைந்து நடத்தும் ‘அட்லஸ் ஏஞ்சல் – II…

70 0 0
இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு; வாள்களுடன் சிக்கிய ஐவர்.!

கொழும்பு, பொரளை பகுதியிலுள்ள வேளுவன வீதிக்கு அருகில் பொலிஸாரின் கட்டளையை மீறி அதிவேகமாகத் தப்பிச் செல்ல முயன்ற முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி,…

54 0 0