உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் சர்வாதிகார ஆட்சியை நடத்த அரசு முயற்சி.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
44 பார்வைகள்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல், அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாகச் சுமார் 20 ஆண்டுகள் தேர்தல்களின்றி வடகொரியாவைப் போன்ற சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்க அரசு முயன்று வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குற்றம் சாட்டினார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு மக்களும் சர்வதேச சமூகமும் வலியுறுத்தி வரும் நிலையில், அதனைப் புறக்கணித்துவிட்டு முழு உலகமும் எதிர்க்கும் 22ஆவது திருத்தத்தைக் கொண்டுவர அரசு தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. ஒரேயொரு அரசியல் கட்சி மட்டுமே நாட்டை ஆட்சி செய்யும் ஒரு கட்சி ஆட்சி முறையை அமைத்து, தேர்தல்கள் இன்றி நீண்ட காலம் ஆட்சியைத் தொடரவே அரசு திட்டமிடுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஜனநாயகக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாலேயே ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை பறிபோனது.

தற்போதைய அரசு சட்டபூர்வமான முறையில் சர்வாதிகாரப் பாதையை நோக்கிச் செல்வதாலேயே ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச அமைப்புகளும் இந்தத் திருத்தத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றன.

எதிர்க்கட்சியினரே சர்வதேச சமூகத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் ஏமாற்றுவதாக அமைச்சர்கள் கூறுவது வேடிக்கையானது. மகாநாயக்க தேரர்கள், கத்தோலிக்க திருச்சபை மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் போன்ற முதன்மையான அமைப்புகள் ஏமாறும் அளவுக்கு அறிவில்லாதவர்கள் அல்லர்.

அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் நாடு பாரிய சர்வதேச நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.” – என்றும் அவர் எச்சரித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு; வாள்களுடன் சிக்கிய ஐவர்.!

கொழும்பு, பொரளை பகுதியிலுள்ள வேளுவன வீதிக்கு அருகில் பொலிஸாரின் கட்டளையை மீறி அதிவேகமாகத் தப்பிச் செல்ல முயன்ற முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி,…

45 0 0
இலங்கை செய்திகள்

மண்கும்பானில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள்.!

நேற்றையதினம் மண்கும்பான் பகுதியில் இருந்து 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து மேலும் தெரியவருகையில்,மண்கும்பான் ஜும்மா பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள கிணறு ஒன்றில்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஆட்சிகள் மாறினாலும் ஊடகர்கள் மீதான அச்சுறுத்தல்கள் நீங்காமல் தொடர்கின்றன.!

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்றமைக்காக அரச ஊடகம் ஒன்றில் பணியாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளமை, காலத்துக்குக் காலம் ஊடகவியலாளர்கள் மீதான…

39 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர்வெட்டு.!

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று (03) இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

82 0 0