உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தமிழ் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செய்தி வெளியிட தடை விதிப்பது வேதனையான விடயம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
119 பார்வைகள்

போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த போதும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன என்றும், அவர்களைச் சுதந்திரமாக செய்தி வெளியிடத் தடை விதிப்பதும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதும் வேதனையான விடயம் என்றும் யாழ். ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கு. செல்வகுமார் தெரிவித்தார்.

மறைந்த இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாசின் நினைவு தினமானது யாழ். ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் பகுதிகளில் இடம்பெறும் மக்களின் பிரச்சினைகளைத் தமிழ் ஊடகவியலாளர்களே தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றனர். தென்னிலங்கை ஊடகங்கள் அதனை வெளிப்படுத்தத் தவறிவிட்டன.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப்பெற்றிருந்தால், இந்த அரசைத் தமிழ் மக்கள் தங்களது அரசாகக் கருதியிருப்பார்கள்.

அரச ஊடகங்களில் நேர்மையாகப் பணியாற்றுபவர்கள் வெளியேற்றப்படுகின்றனர். செம்மணி மனிதப் புதைகுழி, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் போராட்டங்களில் செய்தி சேகரித்தமை போன்ற காரணங்களைக் காட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் அரச ஊடகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை இதற்குச் சான்றாகும்.

நடைபெறும் உண்மையான சம்பவங்களை மறைக்காமல் வெளிப்படுத்துவதே ஊடகவியலாளர்களின் கடமை. தங்களுக்கு எதிரான விடயங்களை மறைக்கும் விதமாகச் செய்திகளைத் தணிக்கை செய்வதில் அரச ஊடகங்கள் செயற்படுகின்றன.

சுதந்திரமாகச் செய்தி அறிக்கையிடுவதற்குத் தடை விதித்து ஊடகவியலாளர்களை மன உளைச்சலுக்குள்ளாக்கும் போக்கு ஜனநாயக நாட்டுக்கு முரணானது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாவீரர்களுக்கான அஞ்சலியுடன் ஆரம்பமான பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் காலை 10:00 மணியளவில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டு ஆரம்பமானது. இதில் முதலாவதாக சென்ற கூட்ட…

69 0 0
இலங்கை செய்திகள்

செம்மணியின் 4 ஆவது இடைக்கால அறிக்கை உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல்!!

செம்மணி விவகாரம் தொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் கூறப்பட்ட ஆய்வுகளை, 4ஆவது இடைக்கால அறிக்கை தலைகீழாக மாற்றி எழுதியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதுவரை கண்டெடுக்கப்பட்ட எச்சங்களில்…

85 0 0
இலங்கை செய்திகள்

ராஜ் சோமதேவா இலங்கை அரசின் கைக்கூலி –  காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி விசனம்!

செம்மணி மனித புதைகுழியின் தொல்லியல் ஆய்வாளர் ராஜ் சோமதேவா தமிழின படுகொலைகளை மூடி மறைக்கும் இலங்கை அரசின் கைக்கூலியாக செயல்பட்டமை அவரது இடைக்கால அறிக்கை எடுத்துக்காட்டுகிறது என…

74 0 0
இலங்கை செய்திகள்

கிரிஷ் நிதி மோசடி வழக்கு:நாமல் எம்.பிக்குமறியல் நீடிப்பு!

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான நிதி மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும்…

62 0 0