இன்றைய ராசி பலன்கள் – 03.09.2026
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று காதுக்கு இனிமை தரும் நல்ல செய்தி வந்து சேரும். நீண்ட நாள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். வெற்றி வாகை சூட கூடிய இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். நிதிநிலைமை சீராக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இப்போது செலவுகளை அதிகரித்துக் கொண்டால், மாத இறுதியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். ஜாக்கிரதை மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட தூர பயணம் உண்டாக வாய்ப்பு உள்ளது. பயணங்களால் மனதளவில் சந்தோஷம் இருக்கும். ஆனால் கொஞ்சம் உடல் சோர்வு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலை வியாபாரம் எல்லாம் சுமூகமாக இருக்கும் நிதி நிலைமை உயரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். மனதிற்கு பிடித்த நபரோடு, மனம் விட்டு பேசுவீர்கள். இதுவரை திட்டிக் கொண்டு, சண்டை போட்டுக் கொண்டிருந்த உறவுகள் கூட உங்களோடு வந்து சேர்ந்து விடுவார்கள். உங்கள் நீண்ட நாள் பிரச்சினைக்கு இன்று நிரந்தர முடிவு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அடக்கம், பணிவு வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். உங்களுக்கு வாழ்க்கையில் உயர்ந்த இடம் கிடைத்தாலும், தன்னலம் இல்லாமல் பொது நலத்தோடு இருப்பீர்கள். தலைகனம் அதிகரிக்காது. பக்குவம் வெளிப்படக்கூடிய நாளாக இந்த நாள் அமையும். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பு தேவை. தாமதத்தால் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. எந்த இடத்திற்கு போவதாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வீட்டிலிருந்து கிளப்பும். நீண்ட நேரம் கைபேசி பயன்படுத்தாதீர்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்லது நடக்கும். தேவையான நேரத்தில் தேவையான உதவியை பெறுவீர்கள். நல்ல ஆதரவான இந்த நாளில் நிறைய நல்ல அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையை வந்து சேரும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். வீட்டின் தேவைகளை படிப்படியாக பூர்த்தி செய்வீர்கள். எதிரி தொல்லை நீங்கும். வீட்டில் தடைபட்டு வந்த சுபகாரிய தடைகள் விலகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பொறுமை தேவை. நிதானத்தோடு நடந்து கொண்டால் பிரச்சினை கிடையாது. நிதானத்தை இழந்து முன் கோபப்படுவதன் மூலம் நிறைய நல்ல விஷயங்களை இழக்க நேரிடும். ஜாக்கிரதை, வேலையிலும் வியாபாரத்திலும் சிந்தித்து செயல்படுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்கவும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் உங்களுடைய ஆரோக்கியத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். சோர்வாக இருந்தால் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக் கொள்வதில் தவறு கிடையாது. வேலைப்பளுவை தலை மேல் இழுத்து போட்டுக் கொள்ள வேண்டாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கவனமாக செயல்பட வேண்டிய நாள். போன போக்கில் எந்த முடிபையும் எடுக்காதீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டும். அவசரப்பட்டு ஏதாவது முடிவு எடுத்தால், எதிர்காலத்தில் அது பெரிய பிரச்சினையை இழுத்துக் கொண்டு வந்து விடும். புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். நீண்ட தூர பயணங்களை கூடுமானவரை தவிர்த்து விடுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சின்னச் சின்ன சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனதளவில் சோர்வு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்காது. பயணங்களால் அலைச்சல் உண்டாகும். ஆரோக்கியம் கெட்டுப்போக வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.