22வது திருத்தம் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் தொடரும்..!
22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று (01) காலை சுமார் 10 மணி அளவில் ஆரம்பமாகி, நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் தரப்பினர், இடைக்கால மனுதாரர்கள் மற்றும் தலைமை வழக்கறிஞர் ஆகியோரின் மேலதிக கருத்துகள் முன்வைப்பு இன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.