உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

நிதி மோசடி – கேகாலை நகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
54 பார்வைகள்

கபானா திட்டமொன்றை முன்னெடுப்பதாகக் கூறி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கேகாலை மாநகர சபை உறுப்பினர் ஒருவரை எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

34 வயதான குறித்த சந்தேகநபர், தேசிய மக்கள் சக்தியின் கீழ் கேகாலை மாநகர சபையின் ஓலகம பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று காலை சுமார் 10.25 மணியளவில் கேகாலை–யட்டோகொட பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர், சந்தேகநபர் நேற்று பிற்பகல் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது வழக்கை செப்டெம்பர் 9ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் நாலக வீரசிங்க, சந்தேகநபரை அன்றுவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

கண்டியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கேகாலை–தீவெல வீதியில் மினுவாங்கமுவ பகுதியில் அமைந்துள்ள காணியில் கபானா திட்டமொன்றை அபிவிருத்தி செய்வதாகக் கூறி குறித்த நகர சபை உறுப்பினர் தம்மிடமிருந்து 26 மில்லியன் ரூபா பணத்தைப் பெற்றதாக வர்த்தகர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த திட்டம் ஒருபோதும் நிர்மாணிக்கப்படவில்லை எனவும், அதற்காகப் பெறப்பட்ட பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வர்த்தகர் முதலில் கேகாலை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்து கேகாலை பொலிஸார் ‘பி’ அறிக்கையொன்றின் மூலம் கேகாலை நீதவான் நீதிமன்றத்திற்கு வழக்கை அறிக்கையிட்டனர்.

பின்னர், விசாரணைகள் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டதுடன், அந்தப் பிரிவினரும் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ‘பி’ அறிக்கையொன்றை சமர்ப்பித்தனர்.

விசாரணைகளின்போது சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களைப் பரிசீலித்த நீதிமன்றம், சந்தேகநபரை செப்டெம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வரவிருக்கும் பெரும்போக விவசாயத் திட்டங்கள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் அறிக்கை.!

நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் கொள்ளளவு மற்றும் வரவிருக்கும் பெரும்போகச் செய்கைக்கான தயாரிப்புகள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் மேலாண்மைப் பணிப்பாளர் பொறியாளர் எச். எம்.…

2 0 0
இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

135 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

118 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

120 0 0