உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

தந்தை செல்வாவின் நினைவுத் தூபி உடைப்பு: தமிழரசுக் கட்சி கடும் கண்டனம்

இலங்கை செய்திகள் 55 நிமிடங்கள் முன்
67 பார்வைகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தெல்லிப்பளைப் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவுத் தூபியே இவ்வாறு உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், தமிழரசுக் கட்சியை தற்போது விமர்சிப்பவர்கள்கூட தந்தை செல்வாவின் செயற்பாடுகளை விமர்சிப்பதில்லை எனக் குறிப்பிட்டார்.

அத்தகைய தலைவரின் நினைவுத் தூபியை உடைத்து சேதப்படுத்தியுள்ளமை வன்மையான கண்டனத்துக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகள் அரசியலில் இயல்பானவை என்றபோதிலும், அவை ஒரு நினைவுத் தூபியை உடைக்கும் அளவுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சி.வி.கே. சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இச்சம்பவம் அனைவரது மனதிலும் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், சம்பவத்துடன் தொடர்புடைய விஷமிகளை உடனடியாகக் கைது செய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22வது திருத்தம் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் தொடரும்..!

22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் மீதான…

44 0 0
இலங்கை செய்திகள்

விரிவுரையாளர்கள் போராட்டத்தில் குதிப்பு!

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதன் காரணமாக, அனைத்து அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று (02) போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக…

29 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்வு

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (01) அம்பாறை மாவட்ட செயலகத்தின் ‘ஏ.ஐ. விக்கிரம’ கேட்போர் கூடத்தில்…

43 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரிக்கை

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தை தற்போதைய இடத்திலிருந்து வேறு பொருத்தமான இடத்திற்கு மாற்றி, புதிய நிரந்தரக் கட்டடமொன்றை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கரைப்பற்று மாநகர…

25 0 0