உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

மண்டலாய்ப் பிள்ளையார் ஆலய மணவாளக்கோல உற்சவம்.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
105 பார்வைகள்

யாழ். வடமராட்சி கிழக்கு, முள்ளியான் மண்டலாய்ப் பிள்ளையார் ஆலய வருடாந்த மணவாளக்கோல உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பகல் 10.30 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை மண்டலாய்ப் பிள்ளையாருக்கு விசேட பூஜையும் அன்னதானமும் இடம்பெற்றன.

தொடர்ந்து மறுநாளான நேற்று திங்கட்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மூலஸ்தானப் பூஜையுடன் ஏனைய பரிபாலன மூர்த்திகளுக்கும் விசேட பூஜை இடம்பெற்று பெருமான் முத்துச் சப்பரத்தில் எழுந்தருளி அதிகாலை 4 மணியளவில் திருவீதி உலா வருகை தந்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மறுநாள் திங்கட்கிழமை அதிகாலை வரை கலை நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றன.

ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ யோகசம்பந்தக் குருக்கள், உதவிக் குருக்கள் சகிதம் மணவாளக்கோல உற்சவத்தை நடத்தி வைத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாதிபதியால் நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து…

97 0 0
இலங்கை செய்திகள்

எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! : அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்!!

Photo – எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது!மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது!! தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ…

86 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விசேட செயற்குழுவின் காலம் நீடிப்பு! : எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எதிர்ப்பு!!

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து யோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின்…

110 0 0
இலங்கை செய்திகள்

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உலக சுற்றுலா தின விழா

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் எதிர்வரும்  25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம் பெற உள்ள  உலக சுற்றுலா தின விழா…

91 0 0