உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

உலக வங்கி உதவியுடன் இலங்கையில் 296 குளங்கள் புனரமைப்பு!

இலங்கை செய்திகள் 15 மணி நேரம் முன்
93 பார்வைகள்

உலக வங்கியின் நிதியுதவியுடன், இலங்கையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் மற்றும் பாசனக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் 296 சிறிய குளங்களைப்புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த கிராமிய-நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் காலநிலை மீளெழுச்சி திட்டத்தின் கீழ் 2029 ஆம் ஆண்டு வரை முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்திற்காக 5.8 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட 18 மாவட்டங்களைச் சேர்ந்த 290 குளங்கள் அவசரக்கால அவசரகால பதிலளிப்புக் கூறுகளின் கீழ் 5.58 பில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளன.

இதில் அதிகபட்சமாக பதுளையில் 97 குளங்களும், இரத்தினபுரியில் 29, மன்னாரில் 24 மற்றும் குருநாகலில் 19 குளங்களும் புனரமைக்கப்படுகின்றன.

அத்துடன் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள மேலும் 6 குளங்கள் 256.2 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டம் நீர் சேமிப்பு மற்றும் விவசாயப் பாசனத்தை மேம்படுத்துவதுடன், வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற காலநிலை அபாயங்களிலிருந்து விவசாய சமூகங்களைப் பாதுகாக்கும் என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவிடைத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிதி மோசடி – கேகாலை நகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்!

கபானா திட்டமொன்றை முன்னெடுப்பதாகக் கூறி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கேகாலை மாநகர சபை உறுப்பினர் ஒருவரை…

16 0 0
இலங்கை செய்திகள்

22வது திருத்தம் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் தொடரும்..!

22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் மீதான…

47 0 0
இலங்கை செய்திகள்

தந்தை செல்வாவின் நினைவுத் தூபி உடைப்பு: தமிழரசுக் கட்சி கடும் கண்டனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கடும் கண்டனம்…

67 0 0
இலங்கை செய்திகள்

விரிவுரையாளர்கள் போராட்டத்தில் குதிப்பு!

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதன் காரணமாக, அனைத்து அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று (02) போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக…

31 0 0