உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாஉல்லாவின் விளக்கமறியல் நீடிப்பு!

இலங்கை செய்திகள் 15 மணி நேரம் முன்
69 பார்வைகள்

பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் மேயர் அகமது செய்யது சக்கி அதாஉல்லாவை எதிர்வரும் செப்டம்பர் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் கடந்த ஆகஸ்ட் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை செப்டம்பர் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், சுகயீனம் காரணமாக சக்கி அதாஉல்லா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால், அவர் இன்று நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்படவில்லை.

சிறைச்சாலை அதிகாரிகளின் அறிக்கைகளைப் பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் செப்டம்பர் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அக்கரைப்பற்று மாநகரசபையின் மேயராக சக்கி அதாஉல்லா பதவி வகித்த காலப்பகுதியில், அங்கு கடமையாற்றிய பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவரை பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் சமூக வலைத்தளமான பேஸ்புக் நேரலையின் ஊடாக குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரால் கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது சந்தேகநபரை ஆகஸ்ட் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர் ஆகஸ்ட் 19ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, விளக்கமறியல் செப்டம்பர் 01ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது மூன்றாவது முறையாக சந்தேகநபரின் விளக்கமறியல் செப்டம்பர் 09ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்வு

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (01) அம்பாறை மாவட்ட செயலகத்தின் ‘ஏ.ஐ. விக்கிரம’ கேட்போர் கூடத்தில்…

44 0 0
அம்பாறை செய்திகள்

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரிக்கை

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தை தற்போதைய இடத்திலிருந்து வேறு பொருத்தமான இடத்திற்கு மாற்றி, புதிய நிரந்தரக் கட்டடமொன்றை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கரைப்பற்று மாநகர…

26 0 0
அம்பாறை செய்திகள்

கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு; தொடர் வீதி விபத்துக்களால் மக்கள் அச்சம்.!

அம்பாறை மாவட்டம், கல்முனை மற்றும் சம்மாந்துறைப் பகுதிகளின் பிரதான வீதிகளில் கட்டாக்காலி நாய்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக, பொதுமக்கள் பெரும் அச்சத்துடனும் அசௌகரியங்களுடனும்…

72 0 0
அம்பாறை செய்திகள்

கல்முனை சந்தாங்கேணியில் நீச்சல் தடாகம் திறந்து வைப்பு.!

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் 104 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டு அரங்கின் அடுத்த கட்ட நிர்மாணப் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வும், புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல்…

82 0 0