உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

காணாமல்போன மாணவிகள் கண்டுபிடிப்பு.!

இலங்கை செய்திகள் 21 மணி நேரம் முன்
65 பார்வைகள்

பலாங்கொடை, பின்னவல – எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய கௌசல்யா, சர்மிளா மற்றும் சதுனி ஆகிய 3 பாடசாலை மாணவிகள் நேற்று (31.08.2026) தனியார் வகுப்புக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.

இது குறித்து பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த மூன்று மாணவிகளும் கண்டி ஊடாக திருகோணமலை சென்றடைந்து, அங்குள்ள பேருந்து தரிப்பிடத்தில் அமர்ந்திருக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

மாணவிகள் திருகோணமலை பொலிஸ் நிலையத்தைத் தாண்டி இறங்கி, பின்னர் முச்சக்கர வண்டியில் சென்றதாகவும், பேருந்து நிலையத்தில் அவர்கள் இருப்பதை இனங்கண்ட நபர் ஒருவர் தங்களுக்கு தகவல் வழங்கியதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம்

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் (UAE) இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய…

34 0 0
இலங்கை செய்திகள்

நிதி மோசடி – கேகாலை நகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்!

கபானா திட்டமொன்றை முன்னெடுப்பதாகக் கூறி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கேகாலை மாநகர சபை உறுப்பினர் ஒருவரை…

18 0 0
இலங்கை செய்திகள்

22வது திருத்தம் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் தொடரும்..!

22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் மீதான…

48 0 0
இலங்கை செய்திகள்

தந்தை செல்வாவின் நினைவுத் தூபி உடைப்பு: தமிழரசுக் கட்சி கடும் கண்டனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கடும் கண்டனம்…

69 0 0