உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

பிணையில் உள்ளவர்கள் எதிர்க்கட்சிப் பங்கை வகிக்க முடியுமா?

இலங்கை செய்திகள் 22 மணி நேரம் முன்
50 பார்வைகள்

“பிணையிலும் சந்தேகத்தின் பேரிலும் இருப்பவர்களால் எதிர்க்கட்சியின் சரியான பங்கை வகிக்க முடியுமா?” என இணைந்த எதிர்க்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் நிலுக்ஷ குமார கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் காலிப் பகுதியில் கூட்டம் ஒன்றை நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சிக் குழுவினர் குறித்து இன்றைய தினம் கொழும்பில் கருத்துத் தெரிவித்த அவர், ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சிலர் ஒன்றாக இணைந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வதாகச் சாடினார்.

குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், பசில் ராஜபக்ஷ மீது சுமத்திய குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டிய நிலுக்ஷ குமார், கேரம் போர்டுகளை நாட்டிற்குள் கொண்டுவந்தவர் வெளியிலும், அதனை விநியோகித்தவர் சிறையிலும் இருப்பதாக எதிர்க்கட்சியினரே பரஸ்பரம் குற்றம் சுமத்திக் கொள்வதை வெளிப்படுத்தினார்.

மேலும், “தெய்வமே, எங்களைக் கைது செய்கிறார்கள்; ஒன்றுதிரண்டு இதைத் தடுப்போம்” என்ற மனநிலையிலேயே இந்தக் குழுவினர் தற்போது செயற்பட்டு வருவதாக விமர்சித்தார்.

நாட்டில் கோதுமை மா விலை உயர்வு போன்ற மக்கள் சந்திக்கும் அத்தியாவசியப் பிரச்சினைகளுக்காக இவர்கள் குரல் கொடுக்கவில்லை என்றும், மாறாகத் தங்களது சொந்த அரசியல் மற்றும் சட்டப் பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதற்காகவே மக்களை முன்னிறுத்தி நாடகமாடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதிபதிகளின் பதவிக் காலம் நீடிக்கப்படுவதால், சட்டத்தின் பிடி இறுகித் தங்களுக்கான தண்டனை உறுதி செய்யப்படும் என்ற அச்சத்திலேயே பிணையில் உள்ள இந்தக் குழுவினர் கூச்சலிட்டு வருவதாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம்

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் (UAE) இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய…

34 0 0
இலங்கை செய்திகள்

நிதி மோசடி – கேகாலை நகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்!

கபானா திட்டமொன்றை முன்னெடுப்பதாகக் கூறி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கேகாலை மாநகர சபை உறுப்பினர் ஒருவரை…

18 0 0
இலங்கை செய்திகள்

22வது திருத்தம் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் தொடரும்..!

22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் மீதான…

48 0 0
இலங்கை செய்திகள்

தந்தை செல்வாவின் நினைவுத் தூபி உடைப்பு: தமிழரசுக் கட்சி கடும் கண்டனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கடும் கண்டனம்…

69 0 0