அவுஸ்திரேலிய ஒருநாள் அணியில் இருந்து லபுஷேன் நீக்கம்!
அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரரான மார்னஸ் லபுஷேன், சிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடர்களுக்கான அவுஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் தொடரில் 3 ஒருநாள் போட்டிகளில் 24 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த லபுஷேன், அதைத் தொடர்ந்து பங்களாதேஷிற்கு எதிரான தொடர்களிலும் சோபிக்கத் தவறியதால் அணியில் தனது இடத்தை இழந்துள்ளார்.
மிட்செல் மார்ஷ் மற்றும் டிரெவிஸ் ஹெட் மீண்டும் அணிக்கு திரும்பியதால் லபுஷேனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
அறிமுக போட்டியில் அசத்திய சகலதுறை ஆட்டக்காரரான ஜோயல் டேவிஸ் மற்றும் இளம் இடதுகை பேட்ஸ்மேன் ஆலி பீக் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிம்பாப்வே தொடரில் மார்ஷ் தலைவராகச் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடருக்கு ஆயத்தமாக இந்த 6 போட்டிகள் கொண்ட தொடர் மிக முக்கியமானது.
அனுபவமிக்க மூத்த வீரர்களுடன் திறமையான இளம் வீரர்களை இணைத்துச் சிறப்பான அணியை உருவாக்கியுள்ளோம் என தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.