உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் நகித் ராணா இல்லை: பங்களாதேஷ் தேர்வுக்குழு அதிரடி முடிவு!

84 பார்வைகள்

சிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வரும் பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் நகித் ராணா, ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விலா எலும்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரைத் தவறவிட்ட ராணா, 6 வார கால ஓய்வுக்குப் பிறகு தற்போது மீண்டும் வலைப்பயிற்சியில் பந்துவீசத் தொடங்கியுள்ளார்.

அவர் மீண்டும் பயிற்சிகளுக்குத் திரும்பிய போதிலும், அவசரப்பட்டு எந்தவித ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இல்லை எனத் தலைமைத் தேர்வாளர் ஹபிபுல் பஷார் தெரிவித்துள்ளார்.

நகித் ராணா 100% ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாட மாட்டார் என்றும், அவரது புனர்வாழ்வு முறையான திட்டமிடுதலுடன் தொடரும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரிலேயே நகித் ராணா களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

பாகிஸ்தானிய கிரிக்கெட் வீராங்கனைக்கு அபராதம்!

ஆசியக் கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியின் போது மைதானத்தில் முறையற்ற செய்கை (gesturing) செய்ததற்காக பாகிஸ்தான் மகளிர் அணித் தலைவர் பாத்திமா சனா மீது…

149 0 0
விளையாட்டுச் செய்திகள்

CPL வரலாற்றில் தசுன் ஷானக்க புதிய சாதனை

CPL வரலாற்றிலேயே அதிவேக சதமடித்து புதிய சாதனை படைத்துள்ளார் இலங்கை அணி வீரர் தசுன் ஷானக்க. செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக களமிறங்கிய ஷானகா,…

78 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கைக்கு அதிர்ச்சி – இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய முக்கிய 2 வீரர்கள்!

இங்கிலாந்திற்கு எதிரான டி20 தொடருக்கு முன்பாக இலங்கை அணிக்கு மிகப்பெரிய இரட்டைப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நட்சத்திர வீரர் குசல் மெண்டிஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ…

104 0 0
விளையாட்டுச் செய்திகள்

இந்தியாவில் நடக்கிறது மகளிர் சாம்பியன்ஸ் கிண்ணம்!

இலங்கையில் நடைபெறவிருந்த முதலாவது மகளிர் செம்பியன்ஸ் கிண்ண தொடர், தற்போது இந்தியாவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் அரசாங்கத்தின் தலையீடு மற்றும் இடைக்காலக் குழு…

82 0 0