உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

சர்வதேசக் காற்பந்தாட்டத்திலிருந்து மெஸ்ஸி ஓய்வு:ஷிகர் தவான், யுவராஜ் சிங் வாழ்த்து

92 பார்வைகள்

அர்ஜென்டீனா காற்பந்தாட்ட அணியின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி (39) சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை முறைப்படி அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்தியக் கிரிக்கெட் நட்சத்திரங்களான ஷிகர் தவான் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அவருக்குத் தங்களது வாழ்த்துகளையும் மரியாதையையும் தெரிவித்துள்ளனர்.

10ஆம் இலக்கச் சீருடை இல்லாமல் அர்ஜென்டீனா அணி இனி பழையபடி இருக்காது என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

ஆட்டம் முடிந்த பின்னரும் விளையாட்டு உலகம் உங்களை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் என யுவராஜ் சிங் பாராட்டியுள்ளார்.

203 சர்வதேச போட்டிகளில் விளையாடி 124 கோல்களை அடித்துள்ள மெஸ்ஸி, அர்ஜென்டீனா மற்றும் தென்னாப்பிரிக்க காற்பந்து வரலாற்றில் அதிக கோல்களை அடித்த வீரராகத் திகழ்கிறார்.

2014 உலகக் கிண்ண தோல்விக்குப் பிறகு, 2022ஆம் ஆண்டு பிரான்ஸ் அணியை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்குப் பின் அர்ஜென்டீனாவிற்கு உலகக் கிண்ணத்தை பெற்றுத் தந்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.

2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் ‘கோபா அமெரிக்கா’ கிண்ணத்தையும் வென்றுகொடுத்தார்.

2006 முதல் 2026 வரை 6 உலகக் கோப்பைகளில் விளையாடி 21 கோல்களை அடித்து, உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டாவது அதிக கோல் அடித்த வீரராக ஓய்வு பெறுகிறார்.

சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும், அமெரிக்காவின் ‘இன்டர் மயாமி’ கிளப் அணிக்காக மெஸ்ஸி தொடர்ந்து விளையாடுவார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

CPL வரலாற்றில் தசுன் ஷானக்க புதிய சாதனை

CPL வரலாற்றிலேயே அதிவேக சதமடித்து புதிய சாதனை படைத்துள்ளார் இலங்கை அணி வீரர் தசுன் ஷானக்க. செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக களமிறங்கிய ஷானகா,…

55 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கைக்கு அதிர்ச்சி – இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய முக்கிய 2 வீரர்கள்!

இங்கிலாந்திற்கு எதிரான டி20 தொடருக்கு முன்பாக இலங்கை அணிக்கு மிகப்பெரிய இரட்டைப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நட்சத்திர வீரர் குசல் மெண்டிஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ…

89 0 0
விளையாட்டுச் செய்திகள்

இந்தியாவில் நடக்கிறது மகளிர் சாம்பியன்ஸ் கிண்ணம்!

இலங்கையில் நடைபெறவிருந்த முதலாவது மகளிர் செம்பியன்ஸ் கிண்ண தொடர், தற்போது இந்தியாவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் அரசாங்கத்தின் தலையீடு மற்றும் இடைக்காலக் குழு…

69 0 0
விளையாட்டுச் செய்திகள்

ரசிகர்கள் எதிர்ப்பால் நியுசிலாந்து வீரருக்கு விழுந்த ஆப்பு!

கவுண்டி செம்பியன்ஷிப் போட்டிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நியுசிலாந்து வீரர் ஸ்காட் குக்கலைன், ரசிகர்கள் மற்றும் ஊழியர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஹாம்ப்ஷயர் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். வார்விக்ஷயர்…

81 0 0