பாபர் அசாம் ஒரு சிறந்த வீரரே அல்ல – பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி சாடல்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் தலைவர் பாபர் அசாமின் செயல்பாட்டைப் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கடுமையாக விமர்சித்துள்ளார்.
“ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களுக்கும் தான் பாபர் அசாம் சிறந்த வீரர். பாகிஸ்தானின் எக்காலத்திற்குமான சிறந்த வீரர்களின் பட்டியலில் அவர் இல்லை. சச்சின் டெண்டுல்கரை விட்டுத் தள்ளுங்கள், எங்களது நாட்டின் சிறந்த வீரர்களுடன் கூட அவரை ஒப்பிட முடியாது” என பாசித் அலி தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டில் 8 டெஸ்ட் போட்டிகளில் 322 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள பாபர் அசாம், கடந்த 4 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“முழு நாட்டின் பேட்டிங் வரிசையும் அவரை மட்டுமே நம்பியிருக்கும் போது, கடினமான சூழ்நிலைகளில் அவர் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்து நாட்டிற்கு ஏமாற்றத்தையே தருகிறார்” எனத் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட போதிலும், காயத்திற்குப் பின் திரும்பிய பாபர் அசாம் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் முறையே 8 மற்றும் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.