உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

டிரம்ப் நிர்வாகத்தில் அமெரிக்க ராணுவ செயலாளர் பதவி விலகல்

உலக செய்திகள் 1 நாள் முன்
46 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் உயர்மட்ட ராணுவ அதிகாரி ஒருவர் பதவி விலகியுள்ளார்.

ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல், சுமார் 18 மாதங்கள் பதவி வகித்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அவரது பதவி விலகலுக்கான காரணம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. எனினும், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராணுவத் தலைமையகத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் உயர்மட்ட மாற்றங்களின் ஒரு பகுதியாக டிரிஸ்கோலின் பதவி விலகலும் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, ராணுவத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி டிரம்ப்புடன் டிரிஸ்கோல் கலந்துரையாடிய பின்னர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

டிரிஸ்கோலின் பதவி விலகல் தொடர்பான தகவலை ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ முதலில் வெளியிட்டிருந்தது. அவரது பதவி விலகலுக்கு முன்னதாக, அவருக்கு நெருக்கமான ஒருவர் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டதுடன், அவர் முன்னெடுத்த ட்ரோன் திட்டமும் கைவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

காலநிலை மாற்றத்துக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை தேவை

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவு, பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய அபாயங்களை வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார். இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக…

76 0 0
உலக செய்திகள்

சவூதியில் ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு’ நிரந்தர செயலகம்

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை’ நடைமுறைப்படுத்துவதற்காக சவூதி அரேபியாவில் நிரந்தர செயலகம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

39 0 0
உலக செய்திகள்

நேபாள பேரழிவு: பலி எண்ணிக்கை 939 ஆக அதிகரிப்பு

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக அதிகரித்துள்ளதுடன், காணாமல் போனோரின் எண்ணிக்கை 4,250 ஆக உயர்ந்துள்ளது. திபெத்–நேபாள எல்லையில் ஏற்பட்ட பெரும் பனிப்பாறைச் சரிவைத்…

62 0 0
உலக செய்திகள்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்:

ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ள ஈரானின் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை அடுத்து, அதற்குப் பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், உலகச் சந்தையில் மசகு எண்ணெய்…

75 0 0